சுட்டெரிக்கும் சூரியன்.. கண்களில் கவனம்.. எச்சரிக்கும் எழும்பூர் கண் மருத்துவமனை மருத்துவர் விநாயகமூர்த்தி - எக்ஸ்க்ளூசிவ்

கோடைகாலங்களில் மக்களுக்கு ஏற்படும் கூடிய கண் பிரச்சனை குறித்தும், அவற்றிலிருந்து மக்கள் எப்படி தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று எழும்பூர் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் விநாயகமூர்த்தி குமுதம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.

Apr 25, 2024 - 16:10
சுட்டெரிக்கும் சூரியன்.. கண்களில் கவனம்.. எச்சரிக்கும் எழும்பூர் கண் மருத்துவமனை மருத்துவர் விநாயகமூர்த்தி - எக்ஸ்க்ளூசிவ்


வெப்ப அலை: தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பாலை வீசும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்து உள்ளது. 

கண்களில் கவனம்: தமிழகத்தில் நாள்தோறும் கிட்டத்தட்ட 10 இடங்களுக்கு மேல் வெயிலானது சதம் அளித்து வருகிறது. இதன் காரணமாக வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் அதிகமாக ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.

கண் மருத்துவர்: கோடை காலத்தில் மக்களுக்கு ஏற்படக்கூடிய கண் பிரச்சனைகள் பற்றியும் அவற்றிலிருந்து மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து எழும்பூர் கண் மருத்துவமனையின் கண் மருத்துவர் விநாயகமூர்த்தி குமுதம் தொலைக்காட்சிக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளார்.

கண்களில் வறட்சி: வெப்பம் அதிகமாக இருப்பதால் கண்களில் உள்ள நீர் சுரக்கும் பைகளில் இருந்து வரும் கண்ணீரானது அதிக அளவில் ஆவியாக வாய்ப்பு இருப்பதாகவும், கண்ணீர் ஆவியாவதால் கண்ணில் வறட்சித் தன்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

கண் வறட்சிக்கு காரணம்: வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் அதிக அளவில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்துகின்றனர் என்றும், கணினியை பார்த்து அதிக நேரம் வேலை செய்வதும் வறட்சி தன்மை ஏற்பட முக்கிய காரணம் என்றும், பொதுவாக ஐடி நிறுவனங்களில் குளிர்சாதன வசதி அதிக அளவு இருக்கும், அதுவே வறட்சி தன்மை ஏற்படும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

கண் சிமிட்டுங்கள்: ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எப்பொழுதும் கணினியை பார்த்து வேலை செய்து வருகின்றனர் என்றும், வேலை செய்யும் போது நேரத்தை பிரித்து செய்ய வேண்டும் என்றும், அதாவது 40 நிமிடங்கள் வேலை செய்தால் அடுத்த சில நிமிடங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்றும், அதிக அளவு நீர் சத்து உள்ள பொருள்களை உட்கொள்ள வேண்டும் என்றும், கண்களை அதிகமாக சிமிட்ட வேண்டும். 

சூடான காற்று கவனம்: குளிர்சாதன அறையில் வேலை செய்கிறார்கள் என்றால் அந்த அறையை விட்டு சிறிது நேரம் வெளியே சென்றால் நல்லது. வெயில் நேரங்களில் இரு சக்கர வாகனத்தில் வெளியில் சென்று வேலை செய்பவர்கள் ஹெல்மெட், கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தலாம் என்றும், அவற்றை அணிந்து கொண்டு போகும் போது சூடான காற்று கண்களில் படுவதை தடுக்கலாம்.

நிறைய தண்ணீர் குடியுங்கள்: பெரியவர்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் பொதுவாக வெயில் நேரங்களில் வெளியே செல்லாமல் காலை 7 மணிக்குள் அல்லது மாலை 6 மணிக்கு மேல் தங்களுடைய வேலைகளை செய்யலாம் என்றும், போதுமான அளவு நீர் பருக வேண்டும் என்றும், நீர் சென்று அதிகம் உள்ள காய்கறிகள் பழங்களை உணவாக உட்கொண்டால் நன்மை தரும் என்றும், தொடர்ச்சியாக அதிக நேரம் குளிர்சாதன அறையில் இருப்பது நல்லதில்லை என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow