மிரட்டல் அரசியலுக்கு அஞ்சமாட்டோம்.. திமுகவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வார்னிங்

ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது என்றால் உடனே மின்சாரம், தண்ணீரை எல்லாம் துண்டிபார்களா என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Apr 25, 2024 - 16:31
மிரட்டல் அரசியலுக்கு அஞ்சமாட்டோம்..  திமுகவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் வார்னிங்

மக்களவை தேர்தலின் போது மயிலாப்பூர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்த பாஜக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து அரசு அதிகாரிகள் தொந்தரவு அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மிரட்டல் அரசியலுக்கு அஞ்சமாட்டோம் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். 

கடந்த 19ம் தேதி தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது, ஆழ்வார்பேட்டையில் உள்ள 134 வது வார்டின், 13வது பூத்தில் வாக்குச்சாவடி முகவராக இருந்த பாஜக நிர்வாகி கௌதமனை திமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து, கௌதமன் இல்லத்திற்கு திமுகவினர் மற்றும் மெட்ரோ நீர் இணைப்பு அதிகாரிகள் வந்து, சம்ப் இருக்கிறதா என பார்வையிட்டு சென்றதாக தெரிகிறது. 

இந்நிலையில், கௌதமனின் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை கேட்டறிந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக அரசு அதிகாரிகளை வைத்து மிரட்டுவது ஏற்றுகொள்ள முடியாது என தெரிவித்தார். 

அத்துடன், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது, அதனால் ஜாதி அரசியலை கையில் எடுத்து RSSல் உள்ள கௌதமனை குறிவைத்தது, ஆனால் அவர் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். பாஜக ஆதராவாளர் என்றாலே உயர்சாதியினர் என எண்ணி திமுக செயல்படுவதாக குற்றம்சாட்டிய தமிழிசை, பாஜகவினருக்கு அனைத்து சாதியினரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். 

மேலும், கௌதமன் வீட்டில் பம்ப் தண்ணீர் தான் உள்ளது, ஆனால் மெட்ரோ அதிகாரிகள் அவரது வீட்டில் சம்ப் இருந்தால் அதனை துண்டிக்க வந்திருப்பதாக சொல்லி இருக்கிறார்கள். ஆட்சி அதிகாரம் அவர்களிடம் இருக்கிறது என்றால் உடனே மின்சாரம், தண்ணீரை எல்லாம் துண்டிபார்களா என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தான் பல தவறுகள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர், திமுகவின் மிரட்டல் அரசியலுக்கு எல்லாம் அஞ்சமாட்டோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow