அதிக பனிப் பொழிவு : பூக்களின் விலை கிடுகிடு உயர்வு - மல்லிகை கிலோ 2,000 ரூபாய்க்கு விற்பனை !!!
தமிழகம் முழுவதும் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக பூக்களின் விலை கிடு , கிடு என உயர்ந்து காணப்பட்டது. மல்லிகை கிலோ ரூபாய் 2 ஆயிரத்திற்கு விற்பனையானது.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வெயில் நிலவுவதாலும், இரவில் பனிப்பொழிவு காணப்படுவதாலும், பூக்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மல்லிகை மற்றும் முல்லை பூக்கள் மலரும் முன்பே பனியால் கருகி விடுகிறது. இதனால் பூக்களின் உற்பத்தி குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது. இது தவிர தற்பொழுது சபரிமலை சீசன் உள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்து உள்ளது.
கோவையில் நேற்று ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 2,000 க்கு விற்பனையானது. மேலும் ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 150 முதல் ரூபாய் 200 வரை விற்பனை செய்யப்பட்டதால், பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறும் போது கோவையில் ஒரு வாரத்திற்கு மேலாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டு உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.
இதன்படி ஒரு கிலோ மல்லிகை ரூபாய் 2,000, முல்லை ரூபாய் 1,200, செவ்வந்தி ரூபாய் 100, சம்பங்கி ரூபாய் 200, ரோஜா ரூபாய் 160 முதல் ரூபாய் 200 வரை விற்பனையானது. இந்த விலை உயர்வானது வருகிற பொங்கல் பண்டிகை வரை இருக்கும், அதன் பின்னர் பூக்கள் விலை படிப்படியாக குறையும் என்றும் தெரிவித்தனர்.
What's Your Reaction?

