எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி: மன்னிப்பு கேட்ட மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை வைகை ஆணையில் நீர் ஆவி ஆகுவதை தடுக்க தெர்மகோல் விடுச்சு சர்ச்சையில் ஏற்படுத்தியவர் செல்லூர் ராஜூ. அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவுடன் செல்பி எடுத்த ஏஐ வீடியோ செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ளார். இதில் நெட்டிசன்கள் எழுப்பிய கேள்விக்கு மன்னிப்பு கோரி செல்லூர் ராஜூ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி: மன்னிப்பு கேட்ட மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ
Selfie with MGR, Jayalalithaa, Edappadi Palaniswami

வளர்ந்து வரும் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வீடியோ, புகைப்படம் எடுத்து சோசியல் மீடியாக்களில் பகிர்வு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், AI மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ட்ரெண்டாகின. அந்த வரிசையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமியுடன் செல்பி ஈடுபப்து போன்ற AI விடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "நண்பர்களே இன்றைய அறிவியல் வளர்ச்சி என்னுடைய இதயதெய்வங்களோடு நான் SELFIE எடுப்பதுபோல்..." என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில், "AI -ல் விளையாடும் செல்லூரார், அவ்வளவுதூரம் போய்விட்டு அண்ணாவை சந்திக்காதது நியாயமா? சார்" என்று ஒருவர் கிண்டல் செய்துள்ளார். இப்படி பலரும் அவரது வீடியோவை பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ள  செல்லூர் ராஜு, "நண்பரே மன்னிக்கவும் தப்புதான்" என்று பதிவிட்டுள்ளார். இருந்த போதிலும் செல்லூர் ராஜூ வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow