பழனி கோயிலில் பக்தர் மீது தாக்குதல் நடத்திய ஊழியர்களை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்.!
பழனி மலைக்கோவிலில் பக்தர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய ஊழியர்களை கண்டித்தும் அதற்கு துணை போன தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த ஜனவரி 30-ம் தேதி காவடி கொண்டு வந்த சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தரான சந்திரன் என்பவர் தரிசன வரிசையில் காத்திருந்தபோது, வரிசையில் நிற்காத பக்தர்களை முன்னுரிமை கொடுத்து அனுப்பியதால் கோயில் நிர்வாகியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த நிர்வாகி ஒருவர் சந்திரனைக் கடுமையாகத் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்தது. அப்போது பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழனி மலை கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே போலீசார் குவிக்கப்பட்டு, பின்னர், அந்த பக்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மற்றும் அதற்கு துணை போன தேவஸ்தான ஊழியர்களை கண்டித்து ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் பழனி பேருந்து நிலையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களில் பக்தர்கள் மீது நடைபெறும் தொடர் தாக்குதல்களைக் கண்டித்தும், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும் , இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேலும், அறநிலையத்துறையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநிலச் செயலாளர் செந்தில், மதுரை கோட்ட செயலாளர் பாலன், இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகி ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
இதையும் படிக்க | “எங்களுக்கு கரும்பலகை வேண்டாம்..! கழிவறை வேண்டும்” - த.வெ.க. நிர்வாகிகளிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவி
What's Your Reaction?