45 லட்சம் மதிப்பிலான நிலத்தை வனத்துறைக்கு தானமாக வழங்கிய குடும்பத்தினர்..!
Coimbatore, Pollachi, Family, Donation, Land, Forest, Ecofriendly, EnvironmentFriendly,
பொள்ளாச்சி அடுத்த அம்முச்சி கவுண்டனூரில் 45 லட்சம் மதிப்பிலான பூர்வீக நிலத்தை வனத்துறைக்கு தானமாகக் கொடுத்த குடும்பத்தினரின் செயல் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனக்கோட்டத்தின் அருகே உள்ள அம்முச்சி கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜிடி நாயுடு, அகிலா ஷண்முகம் குடும்பத்தினர். இவர்கள் தங்களது குடும்பத்திற்கு சொந்தமான 15.56 சென்ட் அளவிலான பூர்வீக நிலத்தை வனத்துறையினருக்கு தானமாக கொடுத்துள்ளனர்.
45 லட்சம் ரூபாய் மதிப்பிலான அந்த நிலத்தை நாற்றங்கால் மற்றும் இதர பல பணிகளுக்காகவும், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் வனத்துறைக்கு தானமாக வழங்குவதாக அக்குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் வன அலுவலர் ஜெயராஜ், உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார், வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன், மற்றும் வனவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க | “எங்களுக்கு கரும்பலகை வேண்டாம்..! கழிவறை வேண்டும்” - த.வெ.க. நிர்வாகிகளிடம் முறையிட்ட அரசு பள்ளி மாணவி
What's Your Reaction?