IPL; அடேங்கப்பா இவ்வளவு சாதனைகளா... லக்னோ அணியை அலறவிட்ட ஹைதராபாத் அணி...
லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அபார வெற்றி.
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப் பிடித்து மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
நேற்று (மே8) நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பத்தில் நிதானமாக ஆடி, கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. இருப்பினும் 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. அந்த அணி வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்களும், அபிஷேக் சர்மா 75 ரன்களும் அடித்தனர்.
இந்த போட்டியில் அபார வெற்றி பெற்றதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நடப்பு தொடரில் இதுவரை 146 சிக்சர்களை விளாசியிருக்கும் ஐதராபாத் அணி, ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர்களை விளாசிய அணி என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
பவர்பிளேயில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்திருக்கிறார். நடப்பு தொடரில் மட்டும் இதுவரை பவர்பிளேயில் 24 சிக்சர்கள் விளாசியிருக்கிறார்.
இதே போல் பவர்பிளேயில் அதிக அரை சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை டிராவிஸ் ஹெட் படைத்திருக்கிறார். நடப்பு தொடரில் இதுவரை 4 அரை சதங்களை அடித்து அசத்தியிருக்கிறார்.
ஐபிஎல் வரலாற்றில் 150-க்கும் அதிகமான ரன்களை அதிவேகமாக சேஸ் செய்த அணி என்ற பெருமையை ஐதராபாத் அணி பெற்றிருக்கிறது.
What's Your Reaction?