Tejasvi Surya Wedding: பாடகியை மணம் முடித்த கர்நாடகா எம்.பி!

பெங்களூரு தெற்கு மக்களைவத் தொகுதி எம்பியான தேஜஸ்வி சூர்யாவின் திருமணம் இன்று எளிய முறையில் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது.

Mar 6, 2025 - 15:49
Tejasvi Surya Wedding: பாடகியை மணம் முடித்த கர்நாடகா எம்.பி!
tejasvi surya weds sivasri skandaprasad

பெங்களூரு தெற்கு மக்களைவத் தொகுதி எம்பியும், பாஜகவின் தேசிய இளைஞரணி செயலாளராகவும் பதவி வகிக்கும் தேஜஸ்வி சூர்யா வியாழக்கிழமையான இன்று கர்நாடக இசைப் பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை கரம் பிடித்தார். நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரதிநிதிகள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர்.

தேஜஸ்வி சூர்யாவின் திருமணத்தில் பங்கேற்ற பல அரசியல் தலைவர்கள், தம்பதிகளின் புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர்கள் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா, அமித் மாளவியா, பி.ஒய்.விஜயேந்திரா மற்றும் மத்திய அமைச்சர் வி.சோமண்ணா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்து உள்ளனர்.

சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் யார்?

சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் கர்நாடக இசைப் பாடகி மற்றும் பரதநாட்டிய கலைஞரும் ஆவார். தனது குருவான ஏ.எஸ்.முரளியிடம் கர்நாடக சங்கீதம் பயின்று இன்று இசைத்துறையில் அசத்தி வருகிறார். பிரம்ம கான சபா மற்றும் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற தளங்களில் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இந்தியா தவிர்த்து டென்மார்க் மற்றும் தென்கொரியாவிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

xiaomi 15 ultra: புதிய போன் மாடலுக்கு இந்தியாவில் என்ன விலை? அப்படி என்ன வசதி இருக்கு?

பீதியை கிளப்பிய 2 வாக்காளருக்கு ஒரே மாதிரியான அடையாள எண்: தேர்தல் ஆணையம் விளக்கம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow