“இது ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்...” கரூரில் ஒரு சதுரங்க வேட்டை!

ஏமாற்றுக் கும்பலிடம் இருந்து 8 பேர் தப்பிய சதுரங்க வேட்டை சம்பவம்

Apr 26, 2024 - 08:15
“இது ரொம்ப ரேர் பீஸ் செட்டியார்...” கரூரில் ஒரு சதுரங்க வேட்டை!

கரூர் அருகே போலி படிகக் கல்லை, மாணிக்கம் என்று கூறி விற்க முயன்ற மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏமாற்றுக் கும்பலிடம் இருந்து 8 பேர் தப்பிய சதுரங்க வேட்டை சீனை விரிவாகப் பார்க்கலாம்....

கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியணை, ஜெகதாபி, மாணிக்கபுரம் உள்ளிட்ட கிராமங்கள் இயற்கை வளங்கள் மிகுந்த பகுதி ஆகும். இங்கு இயற்கையாகவே மாணிக்கம், மரகதம், நீலக் கற்கள் போன்ற விலையுயர்ந்த கற்கள் கிடைப்பதாக நம்பப் படுகிறது. இதை நம்பி ஒரு கூட்டம் ஆங்காங்கு கிடைக்கும் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ய முயன்று வருகிறது. இந்த வியாபாரத்திற்கு இடைத்தரகர்களெல்லாம் கூட உண்டு. அப்படி வெட்டி எடுத்து விற்பனை செய்பவர்களை, போலீசார் தடுக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். 

அந்தக் கும்பலில் ஒருவரான திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், 3 பேருடன் சேர்ந்து படிக கல் ஒன்றை, பல கோடி ரூபாய் மதிப்பிலான மாணிக்கக் கல் என்று விற்க முயன்றுள்ளார். அந்தக் கல்லைப் பாஞ்சாளி அம்மாள் என்ற சித்தரிடம் வாங்கியதாக முதல் புருடாவை விட்ட அவர்கள், அதை வாங்க நல்ல பார்ட்டிகளை கூட்டி வருமாறு இடைத்தரகர்களைக் கேட்டுள்ளனர். அதை நம்பி, சேலம், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்து 8 பேர் இவர்களைத் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒட்டுக்க ஒரே வீட்டில் அசம்பிள் செய்த கும்பல், இதன் விலை 150 கோடி என்று சொல்லி பேரம் பேசியிருக்கிறது. 

ஒரே வீட்டில் 11 பேர் கும்பலாக ஏதோ செய்கிறார்கள் என்று அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதன்பேரில் அங்கு வந்த காவலர்கள், விசாரித்ததில் இது இன்னொரு சதுரங்க வேட்டை கும்பல் என்று தெரிய வந்திருக்கிறது. உடனே அந்த 3 பேரைக் கைது செய்த காவலர்கள், மாணிக்கக் கல் என்று சொல்லப்பட்ட போலி படிகக் கல்லையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். பேராசையால் பெரும் வலையில் விழத் தெரிந்தவர்கள் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்தோம் என்று சம்பவ இடத்தை விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடியிருக்கிறார்கள். மக்களே உஷார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow