திமுகவினர் வீடுகளை குறிவைத்து ஐடி ரெய்டு... திருத்தணியில் பரபரப்பு...
திருத்தணியில் திமுக பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் அரக்கோணம் தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருத்தணியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளரான பூபதியின் வீட்டில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் 20 பேர், திருத்தணி பேருந்து நிலையம் அருகே சன்னதி தெருவில் உள்ள பூபதியின் வீடு, அரக்கோணம் சாலையில் உள்ள நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜின் உறவினர் வீடு, திமுக நகரமன்ற கவுன்சிலர் வெங்கடேசனுக்கு சொந்தமான உணவகம், சித்தூர் சாலையில் கன்னியப்பன் என்பவருக்கு சொந்தமான பாத்திரக் கடை ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், பணம், ஆவணங்கள் கைப்பற்றப்படாத நிலையில், இந்த சோதனை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
What's Your Reaction?