இரும்புத் தடுப்புகள், முட் கம்பிகள், கண்ணீர் புகைக்குண்டுகள்..விரட்டியடிக்கப்படும் விவசாயிகள்..!

முதலுதவி கூட கிடைக்காமல் விவசாயிகள்.......

Feb 14, 2024 - 08:57
இரும்புத் தடுப்புகள், முட் கம்பிகள், கண்ணீர் புகைக்குண்டுகள்..விரட்டியடிக்கப்படும் விவசாயிகள்..!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ஹரியானா - பஞ்சாப் எல்லையில் தடுத்து நிறுத்தி கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்த போலீசார்: இரும்புத் தடுப்புகள், முட்கம்பிகளுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்து நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் புகழ்பெற்ற கோஷமான "டெல்லி சலோ" என்ற பெயரில் விவசாய சங்கங்கள் போராட்டத்தை அறிவித்தன.

மத்திய அரசின் கடைசி முயற்சியாக மத்திய உணவுத்தறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய விவசாயத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா ஆகியோர் விவசாயத் தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மின்சார சட்டம் 2020 ரத்து, லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினருக்கு இழப்பீடு, விவசாயிகள் மீதான போராட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது ஆகிய கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.

இருப்பினும் விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளான வேளாண் பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம், விவசாயக் கடன் தள்ளுபடி, சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்துதல் ஆகியவற்றுக்கு அரசு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.

மத்தியஅரசு உடனான 5 மணி நேர பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள், தங்களின் நேரத்தை வீணடிக்க மட்டுமே அரசு விரும்புவதாகவும் ஏற்கனவே அறிவித்தபடி போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர்.

India farmers: The viral image that defines a protest

இதனால் டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விவசாயிகளின் வாகனங்களை பஞ்சர் செய்யும் வகையில் சாலைகளில் ஆணிகள் பொருத்தப்பட்டன. டெல்லி எல்லைகளில் கன்டெய்னர்கள், போலீஸ் வாகனங்கள், ராட்சத கான்க்ரீட் தடுப்புகள், கூர்மையான ஒயர்கள், முட்கம்பிகள், கிரேன்கள், பொன்லைன் எந்திரங்கள், வஜ்ரா வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக பஞ்சாப் - ஹரியானா - டெல்லி எல்லையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 

இதனையும் மீறி அறிவித்தபடி, பஞ்சாப்- ஹரியானாவில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் வாகனங்களுடன் தலைநகரை நோக்கி புறப்பட்டனர். அப்போது பல்வேறு பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டு விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.

Farmers protest: AAP govt stands with farmers; Haryana police fire tear gas  at Shambhu border | Latest News India - Hindustan Times

தொடர்ந்து பலர் காயமுற்று அவதியுற்ற போதும், முதலுதவி கூட கிடைக்காமல் விவசாயிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதற்றமான சூழலால், டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Photos: Farmers' protests overshadow India's Republic Day parade | Protests  News | Al Jazeera

இந்நிலையில் ஆணிகளை உடைக்கும் கருவிகள் உள்ளிட்டு ஊசி முதல் சுத்தியல் வரை அனைத்தையும் உடன் எடுத்துச் செல்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Tractor Rally: Opposition Leaders Condemn Violence, Criticise Centre's  'Insensitivity'

ஆறு மாத ரேசன் பொருட்களுடன்தான் வீட்டை விட்டு புறப்பட்டதாகவும், போதுமான டீசலுடன் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும்  படிக்க   |  ஐக்கிய அரபு அமிரகத்தில் முதல் இந்து கோயில் - பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow