தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரை..? ஹச்.ராஜா மீது பறக்கும் படை புகார் !
காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் வேட்பாளர் தேவநாதன் யாதவ் ஆகியோர் மீது புகார்
தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரை செய்ததாக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது பறக்கும் படை அலுவலர் காரைக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தேர்தல் பரப்புரை நேற்று (ஏப்ரல் 17) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் பகுதியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் தேவநாதன் யாதவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதாக பறக்கும் படை அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தேர்தல் ஹச்.ராஜா, வேட்பறக்கும் படை அலுவலர்கள், அங்கிருந்தபாளர் தேவநாதன் யாதவ் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், வாக்குசேகரிப்புக்கான நேரம் நிறைவுற்றதாக கூறி அப்பகுதியில் இருந்து வெளியேறும்படி அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதுதொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் பாண்டிமாதேவி, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் வேட்பாளர் தேவநாதன் யாதவ் ஆகியோர் மீது புகாரளித்துள்ளார்
What's Your Reaction?