"ஓட்டு போட்டா சுட்டுடுவேன்".. துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்.. ராகுல் காந்தி தொகுதியில் பரபரப்பு

Apr 24, 2024 - 16:09
Apr 24, 2024 - 16:53
"ஓட்டு போட்டா சுட்டுடுவேன்".. துப்பாக்கியுடன் மிரட்டிய மாவோயிஸ்டுகள்.. ராகுல் காந்தி தொகுதியில் பரபரப்பு

கேரள எல்லையில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு ஊருக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள், அங்கு வசிக்கும் மக்களை, தேர்தலை புறக்கணிக்கும்படி துப்பாக்கியுடன் மிரட்டிவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு - கேரளா எல்லையை ஒட்டியுள்ளது மாணந்தவாடி தலபுழா தேயிலை எஸ்டேட். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் உள்ளிட்டோர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த பகுதி ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதிக்கு உட்பட்ட ஊராகும்.

இந்நிலையில், இன்று (24.04.24) காலை 6 மணி அளவில் ஊருக்குள் புகுந்த மாவோயிஸ்டுகள், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாததை கண்டித்து, வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு வலியுறுத்தியதோடு, துப்பாக்கியையும் காட்டி மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

மின்வசதி கூட செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கும்படி கூறி, 4 மாவோயிஸ்டுகள் ஊருக்குள் வந்ததாகவும், அதில் 3 பேர் துப்பாக்கி வைத்திருந்தாகவும், அவர்களை நேரில் பார்த்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தண்டர்போல்ட் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று, மக்களிடம் விசாரணை மேற்கொண்டதோடு, மாவோயிஸ்டுகளை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow