ஆயன்குளம்: மீண்டும் செயல்படத் தொடங்கிய அதிசய கிணறு
கிணறு அனைத்து வெள்ள நீரையும் வழக்கம்போல உள்வாங்கி வருகிறது
மீண்டும் அதிசய கிணறு செயல்பட தொடங்கியதையடுத்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டம், திசையன்விளை அடுத்த ஆயன்குளம் அதிசய கிணறு மீண்டும் தண்ணீரை உள்வாங்கி செயல்பட தொடங்கியது.தென் மாவட்டங்களில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கனமழை பெய்தது. இதன் காரணமாக ராதாபுரம், திசையன்விளை சுற்றுவட்டார பல குளங்களுக்கு வெள்ளநீர் வந்தடைந்தது.
இதையடுத்து திசையன்விளை அடுத்த ஆயன்குளத்தில் வெள்ளநீர் அதிசய கிணறுக்கு வந்த நிலையில் நேற்று திடீரென கிணறு மூடியது.இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட்டு அப்பகுதியில் வெள்ளத்தால் அடைக்கப்பட்டிருந்த மண் சூழப்பட்ட அடைப்பை நீக்கி சரி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து இன்று காலை முதல் மீண்டும் கிணறு அனைத்து வெள்ள நீரையும் வழக்கம்போல உள்வாங்கி வருகிறது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
What's Your Reaction?