" PEN " கேமராவில் ஆபாச படம்..வசமாக சிக்கிய பல் டாக்டர் !

ராயபுரம் மாதா கோவில் தெருவில் தனது வீட்டில் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு இருக்கும் பெண்ணின் வீட்டில் ஸ்பை பேனா கேமரா வைத்து உடை மாற்றுவதை வீடியோ எடுத்த பல் மருத்துவரை ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

" PEN " கேமராவில் ஆபாச படம்..வசமாக சிக்கிய பல் டாக்டர் !

ராயபுரம் மாதா கோவில் தெருவில் தனது வீட்டில் இரண்டாவது தளத்தில் வாடகைக்கு இருக்கும் பெண்ணின் வீட்டில் ஸ்பை பேனா கேமரா வைத்து உடை மாற்றுவதை வீடியோ எடுத்த பல் மருத்துவரை ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராயபுரம் மாதா கோவில் தெருவை சேர்ந்த கலீல் ரகுமான் என்பவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். ரகுமானின்  மனைவி தஸ்லீம், இவர்களுக்கு ஒன்பது வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ராயபுரம் மாதா கோவில் தெருவில் இரண்டாவது தளத்தில்  வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில் நேற்று காலை கலீல் ரஹ்மானின் மனைவி  தஸ்லீம் வீட்டின் படுக்கை அறையை சுத்தம் செய்த போது வண்ண நிறத்தில் வெளிச்சம் சுடர்வதைக் கண்ட அவர் வித்தியாசமான பேனாவாக இருக்குமோ என நினைத்தார். மேலும் இது குறித்து கணவருக்கு தகவலும் தெரிவித்ததோடு கணவர் தன்னை கண்காணிக்க பேனா வைத்து சென்றுள்ளாரோ எனவும்  தஸ்லீம் கேட்டுள்ளார்.

ஆனால் இதனை தஸ்லீம் கணவர் மறுத்து பேனாவை அதே இடத்தில் வைக்கும் படி தெரிவித்துள்ளார். பணியில் இருந்து மாலையில் திரும்பி வந்த கலீல் ரகுமான் பேனாவை சோதனை செய்தபோது ஸ்பை கேமிரா பேனா என தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் பேனாவை திறந்து பதிவான காட்சிகளை பார்த்த பொழுது தனது மனைவி தஸ்லீம்  உடை மாற்றும் காட்சிகள் மற்றும் அதிகப்படியான பல்வேறு வீடியோ காட்சிகள் இருப்பதை கண்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இதுகுறித்து கலீல் ரகுமான் ஸ்பை கேமராவுடன் ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது அதே இரண்டாவது தளத்தில் வீட்டின் உரிமையாளர் அப்துல் சம்பத்  மகன் இப்ராஹிம்  தான் இந்த ஸ்பை பேனா கேமரா வைத்து ஆபாசமாக வீடியோ எடுத்து என தெரிய வந்தது.

விசாரணையில் இப்ராஹீம்  பி டி எஸ் பல் மருத்துவ படிப்பு முடித்துவிட்டு கிளினிக் வைத்திருப்பதாகவும் மேற்கொண்டு எம் டி எஸ் படிப்பதற்காக. ராமச்சந்திரா தனியார் மருத்துவ கல்லூரியில்  இறுதி ஆண்டு பயின்று வருவதாக தெரியவந்தது. மேலும் இதனை அடுத்து மருத்துவர் இப்ராஹீமை ராயபுரம் போலீசார் மூன்று வழக்குகளின் கீழ் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow