திருநெல்வேலிக்கு இன்று வருகிறார் பிரதமர் மோடி... 5 அடுக்கு பாதுகாப்பு.. ட்ரோன்கள் பறக்கத் தடை
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். மோடி வருகையை முன்னிட்டு நெல்லையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாட்டுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டு வருகிறார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவித்த பிறகு தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில் இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். வாக்கு சேகரிப்பதற்காக 8வது முறையாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, நெல்லை மாவட்டம் அகஸ்தியர்பட்டியில் நடக்க இருக்கும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்காக, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று மாலை 4 மணிக்கு அகஸ்தியர்பட்டிக்கு வரவுள்ளார். மாலை 5 மணி வரை பாஜக பொதுக் கூட்டத்தில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமர் வருகையையொட்டி பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கும் விடுதிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான ரயில், பஸ் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5 கிமீ சுற்றளவில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.
What's Your Reaction?