கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்.. வேலைவாய்ப்பு முகாம்.. உழவர் வழிகாட்டு மையங்கள்.. பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை.. போதை மறுவாழ்வு மையங்கள்.. பாரிவேந்தரின் சூப்பர் வாக்குறுதிகள்
பாஜக கூட்டணியில் பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர், அத்தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்,
* அரியலூர் - பெரம்பலூர் - துறையூர் - நாமக்கல் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் முயற்சியின் தொடர்ச்சியாக வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
* புள்ளம்பாடி மற்றும் லாலாப்பேட்டையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
* லால்குடி மற்றும் குளித்தலையில் தலா ஒரு கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* "வேந்தரின் இலவச உயர்கல்வி" திட்டத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்கள் 1,200 பேருக்கு இலவச உயர்கல்வி வழங்கப்படும்.
* பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 1,500 ஏழை, எளிய குடும்பங்களுக்கு SRM மருத்துவமனை மற்றும் மருத்துவ நிறுவனங்களின் மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் மதிப்பில் இலவச உயர் சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்படும்.
* 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் 6 மாதத்திற்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
*
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்திட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும்.
* மகளிர் சுயதொழில் தொடங்கிட பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
* மத்திய அரசின் ஆதரவுடன் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் குறைந்தபட்சம் ஒரு பொதுத்துறை நிறுவனமாவது நிறுவ முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் விளையாட்டு மைதானத்துடன் கூடிய உடற்பயிற்சி மையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* 6 தொகுதிகளிலும் விவசாயிகள் நலனுக்காக உழவர் வழிகாட்டு மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்படும்.
* காவிரி ஆற்று நீரை பாசனத்திற்காக சேமிக்க முசிறி மற்றும் தொட்டியம் பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வலியுறுத்தப்படும்.
* பெரம்பலூர் மற்றும் முசிறியில் சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பழங்களுக்கு மதிப்பு கூட்டு தொழிற்சாலைகள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* மண்ணச்சநல்லூர் பொன்னி அரிசி மற்றும் பெரம்பலூர் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டு, விவசாய விளைபொருட்களின் பாரம்பரியம் மற்றும் தரம் பாதுகாக்கப்படும்.
* திருச்சியில் இருந்து சேலம் செல்வதற்கான மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் வழியாக செல்லும் தற்போதுள்ள சாலைகளை, தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
* திருச்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து முசிறி செல்லும் சாலையை 4 வழிச் சாலையாக தரம் உயர்த்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
* காவிரி ஆற்றின் உபரி நீர் சிக்கதம்பூர் ஏரியை நிரப்பவும், நிலையான நீர் மேலாண்மையை உறுதி செய்யவும் முயற்சி மேற்கொள்ளப்படும்.
* காவிரி ஆற்றில் இருந்து குளித்தலை தொகுதியில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு நீர் நிரப்ப தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படும்.
* கூகூர் கிராமத்தில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையருக்கு வெண்கல சிலை பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும்.
* வீரன் சுந்தரலிங்கம் குடும்பனாரின் நினைவைப் போற்றும் வகையில் துறையூர் ரவுண்டானா பகுதியில் வெண்கலச் சிலை பாரிவேந்தரின் சொந்த நிதியில் நிறுவப்படும்.
* பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும், போதை மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?