பூச்சிகொல்லி மருந்து புகார்: இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடை

பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதாக புகாரை அடுத்து இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை விதித்தது. இதனால் இந்திய  மாம்பழ வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பூச்சிகொல்லி மருந்து புகார்: இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடை
இந்திய மாம்பழங்களுக்கு நேபாளத்தில் தடை

இந்தியாவில் மாம்பழ சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஜூலை மாதம் வரை நீடிக்கும். முக்கனிகளில் முதன்மையான மாம்பழம், தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என ஆந்திரா உள்பட பிற மாநிலங்களிலும் விளைகிறது. இந்திய மாம்பழங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு அதிகம். இதனால் இந்திய மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

நம் நாட்டின் மாம்பழங்கள் இறக்குமதிக்கு கிழக்காசிய நாடான ஜப்பான் ஏற்கனவே தடை விதித்ததுள்ளது. இந்த மாம்பழங்களை அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் இருப்பதால் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நேபாளமும் தடை விதித்துள்ளது.  எல்லை பகுதிகளில் அவற்றை தனிமைப்படுத்தும் வசதி இல்லாததாலும் இந்த தடை விதிக்கப்படுவதாக நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்திய மாம்பழங்களுடன் போட்டியிட முடியாமல் திணறிய உள்நாட்டு மாம்பழ விவசாயிகளுக்கு இது ஊக்கம் அளிக்கும் என நேபாள அரசு நினைக்கிறது.  நேபாளத்தின் தேவைக்கு உள்நாட்டு மாம்பழங்கள் மட்டும் போதாது என்றும், வரத்து குறைவால் மாம்பழம் விலை கணிசமாக உயரும் அந்நாட்டு மாம்பழ வியாபாரிகள் நினைக்கின்றனர். அதே நேரம் நேபாளத்திற்கு டன் கணக்கில் மாம்பழங்களை ஏற்றுமதி செய்ய தயாராக இருந்த இந்திய வியாபாரிகளுக்கு இந்த தடை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow