நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை சொந்த ஊரில் வீழ்த்திய பிரக்ஞானந்தா...உலகை வெல்லும் தமிழன்!

சொந்த ஊரிலேயே உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இந்த தொடரின் பெண்களுக்கான பிரிவு போட்டியில் பிரக்னந்தாவின் சகோதரி வைஷாலியும் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

May 30, 2024 - 10:19
நார்வே செஸ் தொடர்: கார்ல்சனை சொந்த ஊரில் வீழ்த்திய பிரக்ஞானந்தா...உலகை வெல்லும் தமிழன்!
பிரக்ஞானந்தா

ஓஸ்லோ: நார்வேயில் நடக்கும் சர்வதேச செஸ் தொடரின் 3வது சுற்றில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். 

நார்வேயில் சர்வதேச செஸ் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் நார்வேயை சேர்ந்த உலக சாம்பியன் கார்ல்சன், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா உள்பட 6 பேர் ஓபன் பிரிவில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 

இதில் பங்கேற்கும் வீரர்கள் ஒவ்வொரு சுற்றிலும் இரு முறை மோத வேண்டும். இதில் முதலாவது சுற்றில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, 2வது சுற்றில் டிங் லிரெனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்நிலையில் 3வது சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சன்-பிரக்ஞானந்தா பலப்பரீட்சை நடத்தினார்கள். 

இதில் பிரக்ஞானந்தா வெள்ளை காய்களை வைத்து விளையாடினார். தொடக்கம் முதலே சாதுரியமாக காய்களை நகர்த்தி கார்ல்சனுக்கு குடைச்சல் கொடுத்த பிரக்ஞானந்தா, இறுதிவரை அதை பின்பற்றி அபார வெற்றி பெற்றார். கிளாசிக்கல் செஸ் தொடரில் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

அதுவும் உலக சாம்பியன் கார்ல்சனை அவரது சொந்த ஊரிலேயே வைத்து பிரக்ஞானந்தா சாய்த்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகள் பெற்று இந்த தொடரில் முன்னிலை வகித்து வருகிறார். 

சொந்த ஊரிலேயே உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. இந்த தொடரின் பெண்களுக்கான பிரிவு போட்டியில் பிரக்னந்தாவின் சகோதரி வைஷாலியும் 5.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow