திருப்பூருக்கு வரும் பிரதமர் மோடி... ரோபோ மூலம் பிட் நோட்டீஸ் வழங்கிய பாஜகவினர்..!

Feb 22, 2024 - 10:15
Feb 22, 2024 - 17:13
திருப்பூருக்கு வரும் பிரதமர் மோடி... ரோபோ மூலம் பிட் நோட்டீஸ் வழங்கிய பாஜகவினர்..!

திருப்பூரில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் ரோபோ மூலம் நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
 
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூர் பகுதியில் வரும் 27ஆம் தேதி தமிழக பாஜகவின் "என் மண் என் மக்கள்" நிறைவு மாநாடு நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான பணிகள் பாஜக சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாஜகவினர் பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில், திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜகவினர் ரோபோ மூலம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ரோபோ கையில், தாமரைப் பூ, மாநாடு குறித்த நோட்டீஸ், சாக்லேட் ஆகியவற்றை ஏந்தியபடி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ஒவ்வொருவர் முன் சென்று நின்றது. இதனை அச்சரியத்துடன் கண்ட மக்கள், ரோபோவின் கையில் இருந்த நோட்டீஸ் மற்றும் சாக்லேட்டை எடுத்துக்கொண்டனர். 

பிரதமர் மோடி வருகை குறித்து ரோபோ நோட்டீஸ் வினியோகம் செய்ததை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அவரை வியப்புடன் பார்த்தனர். 

மேலும் படிக்க : 

https://kumudam.com/The-old-woman-carrying-the-beef-was-dropped-off-in-the-middle-of-the-forest-by-the-government-bus-operator...

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow