மாரடைப்பால் இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.3.50 லட்சம் நிதியுதவி

காவல்துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் மரணம் அடைந்த சிங்காரவேலன் குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட எஸ்பி நேரில் சென்று நிதி  வழங்கிய ஆறுதல் கூறிய சம்பவம் காவலர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Jan 5, 2024 - 14:25
Jan 5, 2024 - 15:01
மாரடைப்பால் இறந்த காவலர் குடும்பத்திற்கு சக காவலர்கள் ரூ.3.50 லட்சம் நிதியுதவி

மாரடைப்பால் இறந்த காவலருக்கு மனிதநேயத்துடன் சக காவலர்கள் உதவியுடன் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் நிதி உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம்,பண்ருட்டி துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் சிங்காரவேலன்.இவர் 2008ல் காவல்துறைக்கு பணியில் சேர்ந்துள்ளார்.கடந்த ஆண்டு நவம்பரில் மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார்.

உயிரிழந்த காவலர் சிங்காரவேலனுக்கு திருமணமாகி மனைவியும்,இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.இந்த நிலையில் இவர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் காவல்துறையிலேயே சோகத்தை ஏற்படுத்தியது.

கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.பி ராஜாராம் இந்த நிகழ்வை கேள்விப்பட்டு தன்னிடம் உள்ள குடும்ப உறவுகளாக போற்றப்படும் காவல்துறை மத்தியில் இறந்த காவலர் குடும்பத்தினருக்கு உதவி செய்திட வேண்டுமென்று ஈகை குணத்தின் அடிப்படையில் வேண்டுகோள் விடுத்தார்.

தற்பொழுது 2003ஆம் ஆண்டு வரைதான் பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது.இறந்த காவலர் 2008ல் பணியில் சேர்ந்துள்ளதால் இவருக்கு பென்ஷன் வரக்கூடிய வாய்ப்புகள் இல்லை என்றும் கூறப்படுகிறது.இதனால் காவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இறந்த காவலர் சிங்காரவேலன் குடும்பத்திற்கு மூன்று லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமாக இன்று நடுவிரப்பட்டு அருகே இறந்த காவலர் இல்லத்திற்கு நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் சென்று இறந்த காவலரின்  படத்திற்கு மலர் துவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவருடைய குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்கி மேலும் அவர்களுடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இறந்தவரின் துணைவியரிடம் மேற்கொண்டு பத்தாம் வகுப்பு வரையாவது படிப்பதற்கு அறிவுரை கூறி தனியார் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார்.மேலும் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு நிச்சயமாக காவல்துறையில் அரசு பணிக்கு பரிந்துரை கடிதம் அனுப்புவதாகவும் கூறினார்.

காவல்துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் மரணம் அடைந்த சிங்காரவேலன் குடும்பத்திற்கு கடலூர் மாவட்ட எஸ்பி நேரில் சென்று நிதி  வழங்கிய ஆறுதல் கூறிய சம்பவம் காவலர்கள் மத்தியில் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow