அரிவாள் வெட்டில் தப்பியோடியவர் சாலை விபத்தில் மரணம்

செங்கிப்பட்டி அருகே டிப்பர் லாரி மீதி விபத்துக்குள்ளானதில் சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரிவாள் வெட்டில் தப்பியோடியவர் சாலை விபத்தில் மரணம்

சினிமாவை மிஞ்சிய அரிவாள் வெட்டு சம்பவத்தில் தப்பியோடியவர் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் விக்டோரியா நகரை சேர்ந்தவர் நித்தியா. இவரது கணவர் சுந்தர் கணேஷ் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்துள்ளது.

இந்நிலையில்  இன்று காலை வீட்டிலிருந்த தனது மனைவி நித்யாவை சரமாரியாக வெட்டிவிட்டு காரை எடுத்து கொண்டு,அதேபோல் யாகப்பா நகர் பிரதான சாலையில் உள்ள பால் டெப்போவில் இருந்த கடை உரிமையாளர்கள் கோபி மற்றும் தாமரை ஆகிய இரண்டு பேரையும் வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளார்.

அப்போது தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே டிப்பர் லாரி மீதி விபத்துக்குள்ளானதில் சுந்தர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தஞ்சை தெற்கு தமிழ் பல்கலைக்கழகம் மற்றும் செங்கிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow