9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த இளைஞர் கைது

ச்சிறுமி கூச்சலிட்டார்.அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

Dec 14, 2023 - 15:49
Dec 15, 2023 - 17:33
9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த இளைஞர் கைது

பள்ளிக்கு அழைத்துச் செல்வதாக கூறி 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில் உள்ள பள்ளியில் 9 வயது சிறுமி ஒருவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு பள்ளிக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்த பொழுது அப்போது அவ்வழியே அதே ஊரைச் சேர்ந்த வீரன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

சாலையில் நடந்து சென்ற சிறுமியை ஏன் நடந்து செல்கிறாய்.மோட்டார் சைக்கிளில் உட்கார், பள்ளியில் விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பி அச்சிறுமி மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்துள்ளார். பள்ளி செல்லும் வழியில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு அருகே மோட்டார் சைக்கிளை வீரன் நிறுத்தியுள்ளார். சிறுமியை கரும்பு தோட்டத்திற்குள் அழைத்து சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இதில் அச்சிறுமி கூச்சலிட்டார்.அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்தனர்.

கரும்புதோட்டத்தில் வீரனிடம் சிக்கியிருந்த சிறுமியை மீட்டனர். வீரனுக்கு தர்ம அடி கொடுத்து, கடலூர் மாவட்ட சிறார் உதவி மையத்தை தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறினர்.அவர்கள் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.அங்கு பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வீரனை கைது செய்து போக்சோ வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது பெற்றோருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow