புதிய உச்சத்தை தொடும் தங்கம்,வெள்ளி : சவரன் ரூ.960 உயர்வு
தங்கம் இன்று காலையில் ஒரே நாளில் சவரனுக்கு ரூ 1600 உயர்ந்திருந்த தங்கம். மாலையில் சவரனுக்கு ரூ. 960 உயர்ந்துள்ளது. வெள்ளியும் கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 216 ரூபாய் விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் (டிசம்பர் 10) தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து, 12,030 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 240 ரூபாய் அதிகரித்து, 96,240 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, 207 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று (டிசம்பர் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,050க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.209க்கும், ஒரு கிலோ ரூ.2,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,250க்கு விற்பனை ஆனது.
இந்த நிலையில் மாலையில் சவரன் ரூ 960 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.98,960-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் காலையில் வெள்ளி விலை புதிய உச்சத்தை எட்டி கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.215க்கு விற்பனை ஆனது.
மாலையில் வெள்ளி கிராம் ரூ 1 உயர்ந்து, 216 ரூபாய் விற்பனை ஆகிறது. தங்கம், வெள்ளி போட்டு போட்டி கொண்டு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
What's Your Reaction?

