விட்டாச்சு லீவு.. ஏப். 13முதல் கோடை விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதலும் 4ஆம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 13 முதலும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 8ம் தேதியுடன் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகள் நிறைவடைய உள்ளன. இதனிடையே 4 முதல் 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் 23ஆம் தேதியுடன் இந்த தேர்வுகள் நிறைவடைய உள்ளன.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணிகளில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இதனிடையே தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வசதிக்காக வருகிற ஏப்ரல் 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த தேதிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கான தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு வருகிற ஏப்ரல் 13ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் ரம்ஜான் பண்டிகை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகளை மட்டும் ஏப்ரல் 22, 23 தேதிகளில் எழுத பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்ரல் 12ம் தேதி வரை பள்ளி வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை தொடங்க இருக்கின்றது
ஏற்கனவே ரம்ஜான் பண்டிகை காரணமாக ஏப்ரல் 10 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த சமூக அறிவியல் மற்றும் அறிவியல் பாட தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்இந்த தேதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கு மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தால் போதுமானது என்றும் தற்போது பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்களை பொறுத்தவரை 26 ஆம் தேதி வரை அவர்களுக்கு வேலை நாட்களாக கருதப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது
பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கிடையே, அரசு பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து, ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவிருந்த சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று, மதுரை மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடத்தப்படாது என்றும், மாறாக அந்த தேர்வு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெறும் என்றும் மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?