"டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணி...  களத்தில் காணவில்லை"  தஞ்சையிலும் "கண்டா வரச் சொல்லுங்க" போஸ்டர்...

தஞ்சாவூரில் தமிழ்நாட்டின் உரிமைகளை "டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை" என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 

"டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணி...  களத்தில் காணவில்லை"   தஞ்சையிலும் "கண்டா வரச் சொல்லுங்க" போஸ்டர்...

திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், வாக்குறுதிகளை நிறைவேற்றாததை குறிப்பிடும் வகையிலும் கண்டா வரச் சொல்லுங்க என்ற போஸ்டர் பிரச்சார வியூகம் தமிழகத்தில் சுழன்று கொண்டிருக்கிறது. 

இந்த பிரச்சாரம் இந்த போஸ்டர் டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருந்தது,  தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இது போன்ற போஸ்டரால் கட்சி தலைவர்கள் மற்றும் அத்தொகுதி எம்பி.க்களை கலக்கமடைய வைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் இது போன்ற போஸ்டர்கள் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் தஞ்சாவூரில், நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்ற பெயரில், "தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லி காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை, களத்திலேயே காணவில்லை, அவர்களை கண்டா வரச் சொல்லுங்க"  என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.  அதில், அரசியல் தலைவர்கள் அமித்ஷா, இபிஎஸ், அண்ணாமலை ஆகியோரின் கேலிச்சித்திர உருவப் படத்துடன் அச்சிடப்பட்டு தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளிலும் இந்தப் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பேசு பொருளாக மாறியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow