“ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த கூத்து”  வாக்குச்சாவடிக்கு தலா 14 பேர் விழுந்த வாக்கு 5 தான்: அறிவாலயம் அதிர்ச்சி 

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 14 பூத் கமிட்டி நிர்வாகிகளை திமுக நியமித்து இருந்தது. ஆனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் வெறும் 5 வாக்குகள் பதிவானதால் திமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

“ஸ்ரீரங்கம் தொகுதியில் நடந்த கூத்து”  வாக்குச்சாவடிக்கு தலா 14 பேர் விழுந்த வாக்கு 5 தான்: அறிவாலயம் அதிர்ச்சி 
அறிவாலயம் அதிர்ச்சி 

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்து இருக்கிறது. திமுக அமைச்சர்கள் 15 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். இது திமுகவுக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி பல தொகுதிகளில் திமுகவினர்களே உதயசூரியனுக்கு வாக்களிக்கவில்லை. உதாரணத்திற்கு ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவினரே அவர்களின் கட்சிக்கு வாக்களிக்கவில்லை என சோசியல் மீடியாக்களில் செய்திகள் வைரலாகி வருகிறது. 

ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஸ்ரீரங்கம் பெண்கள் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 91 ஆவது வாக்குச்சாவடியில் திமுக வேட்பாளருக்கு 5 வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பாக தொகுதிவாரியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், இளைஞரணி நிர்வாகி, மகளிரணி நிர்வாகி என தலா 14 பேரை திமுக நியமனம் செய்து இருந்தது.

ஆனால் ஸ்ரீரங்கம்  91 ஆவது வாக்குச்சாவடியில் உதயசூரியன் சின்னத்திற்கு வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதாவது, பூத் கமிட்டி நிர்வாகிகள் 14 பேர் இருந்த நிலையில், அந்த வாக்குகள் ஆவது திமுக விழுந்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் 5 வாக்குகள் பதிவாகி இருப்பது திமுகவினரே உதயசூரியன் சின்னத்திற்கு  வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow