உலகப் புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோயில் திருவிழா.. தேர்தல் அன்று தொடக்கம்...
உலக புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா ஏப்.19ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் மதுரையில் உள்ள கள்ளழகர் கோயிலில் 10 நாட்கள் திருவிழாவானது மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் மாதம் 19-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கவுள்ளது.
தொடர்ந்து ஏப்ரல் 21-ம் தேதி மாலை 6.10 மணி முதல் 6.25-க்குள் தங்க பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படுவார். மறுநாள் அதாவது ஏப்ரல் 22-ம் தேதி மூன்று மாவடியில் எதிர்சேவை முடித்து ஏப்ரல் 23-ம் தேதி காலை 6.10மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியின் போது கள்ளழகர் என்ன நிற ஆடை அணிகிறார் என்பது கவனிக்கப்படும். அதற்கேற்ப உலகில் நல்லது, கெட்டது நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உதாரணமாக கள்ளழகர் பச்சை உடை உடுத்தி ஆற்றில் இறங்கினால் அந்தாண்டு விவசாயம் செழிக்கும் என நம்பப்படும்.
அதனை தொடர்ந்து ஏப்ரல் 26-ம் தேதி அழகர் மலைக்கு புறப்படுதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 27-ம் தேதி காலை 11 மணிக்குள் அழகர் கோயில் இருப்பிடம் வந்து சேருதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தல் அதே தேதியில் திருவிழா தொடங்க இருப்பதால், மதுரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு எவ்வித இடையூறும் இன்றி திருவிழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?