மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிக்கும் பணிகளை விரைந்து நடத்திட அறிவுறுத்தல்
திருநின்றவூரில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் திருவள்ளூர் ஆட்சியர் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகராட்சி ராமதாஸ்புரம், பெரியார் நகர், முத்தமிழ் நகர், பாரதியார் தெரு , கம்பர் தெரு ஆகிய குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதை ராட்சத மோட்டார்கள் மூலமாக வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உடன் ஆய்வு செய்தனர்.
குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீர் வடிக்கும் பணிகளை விரைந்து நடத்திட நகராட்சி அலுவலர்களுக்கும், பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து திருவள்ளூர் முதல் திருநின்றவூர் வரை செல்லும் சாலையில் கொட்டா மேடு ஊராட்சி பகுதியில் மழைநீர் வடிப்பதற்காக கால்வாய் அமைத்து கால்வாய் மூலம் தண்ணீர் வடிக்கும் பணிகளையும் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர்.ஆய்வின்போது நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக மத்தியக்குழு நேற்று திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?