தீபாவளிக்காக இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணமா?!...அரசு வெளியிட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் புள்ளி விவரம்!

தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 தினங்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 8ஆயிரத்து 284 பேருந்துகளில் 5லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அவற்றில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nov 1, 2024 - 13:57
தீபாவளிக்காக இத்தனை பேர் சொந்த ஊர்களுக்கு பயணமா?!...அரசு வெளியிட்ட பாயிண்ட் டூ பாயிண்ட் புள்ளி விவரம்!

தீபாவளியை முன்னிட்டு கடந்த 3 தினங்களில் கிளாம்பாக்கத்தில் இருந்து 8ஆயிரத்து 284 பேருந்துகளில் 5லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் அவற்றில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும்,  தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர்

தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மின்கம்பங்கள், மின்விளக்குகள் மற்றும் வாகனங்களுக்கு அருகே பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்கும் போது தண்ணீர் மற்றும் மணல் வாளியை அருகில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தீபாவளியின் காரணமாக நேற்று காலை முதலே சென்னையின் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காட்சியளித்தது குறிப்பிடத்தக்கது.

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வெடிக்கப்பட்ட பட்டாசுகளின் குப்பைகள் சென்னை நகர் முழுவதும் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன. இந்த கழிவுகளை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கமாக இயக்கப்படும் 3ஆயிரத்து 408 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 876 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அக்டோபர் 28ஆம் தேதி ஆயிரத்து 692 பேருந்துகளில் 1லட்சத்து 10ஆயிரம் பயணிகளும், 29ஆம் தேதி 3ஆயிரத்து 221 பேருந்துகள் மூலம் 2லட்சத்து 40ஆயிரம் பயணிகளும், 30ஆம் தேதி 3ஆயிரத்து 417 பேருந்துகள் மூலம் 1லட்சத்து 75ஆயிரம் பயணிகளும் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர். மொத்தமாக 3 நாட்களில் 8ஆயிரத்து 284 பேருந்துகள் மூலம் 5லட்சத்து 25ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow