மீண்டும் தங்கம், வெள்ளி விலை விர்ர்ர்ர், சவரன் ரூ.3,600 உயர்வு
தங்கம், வெள்ளி விலை இன்று மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. நேற்றைய தினம் தங்கம், வெள்ளி விலை குறைந்த நிலையில், இன்று மீண்டும் சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
சர்வதேச சந்தையின் அடிப்படையில் தங்கம், வெள்ளி விலை மாற்றி அமைக்கப்படுகிறது. தினந்தோறும் மாற்றி அமைக்கப்படும் இந்த விலை மாற்றத்தால், தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கத்துடன் போட்டி போட்டு வெள்ளி விலையும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,720 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.215 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 5,000 குறைந்து, ரூ.3,40,000-க்கும், கிராமுக்கு ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.340-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை.
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 360க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவிற்கு ரூ 20 ஆயிரம் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3,60,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
What's Your Reaction?

