ரன்-அவுட் ஆகியும் அவுட் கொடுக்காத அம்பயர்! - காரணம் என்ன?

Feb 12, 2024 - 17:36
Feb 12, 2024 - 21:08
ரன்-அவுட் ஆகியும் அவுட் கொடுக்காத அம்பயர்! - காரணம் என்ன?

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டியில் விநோத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆயினும்,  அந்த போட்டியில் ஒரு விநோத சம்பவம் நடைபெற்றது. 19ஆவது ஓவரில் அல்சாரி ஜோசஃப் பந்தை அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். அந்த பந்தை மிட்செல் மார்ஷ் பிடித்து ஸ்பென்சர் ஜான்சனிடம் எரிந்தார். ஜான்சனும் ஸ்டெம்பில் அடித்தார்.

ரீபிளேவில் அல்சாரி ஜோசஃப் அவுட் ஆனது மைதானத்தில் இருந்த பெரிய திரையில் காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆஸ்திரேலியா வீரர்களிடம் கள நடுவரிடம் அவுட் கேட்டனர். ஆனால், அவர்கள் உடனடியாக அப்பீல் செய்யாததால், அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சிரிப்பலை எழுந்தது.

வீடியோ பார்க்க:

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow