மீண்டும் போர் பதற்றம், ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த ட்ரம்ப் உத்தரவு
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் ஈரான் படகுகளைக் கண்டால் உடனடியாகச் சுட்டு வீழ்த்த அமெரிக்க கடற்படைக்கு அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஈரான், அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
போர் நிறுத்தம் காலவரையின்றி நீட்டிப்பட்டிருந்தாலும், இரு தரப்பும் கடல்வழி முற்றுகையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வணிகக் கப்பல்களின் போக்குவரத்து இயல்புநிலைக்குத் திரும்பவில்லை. ஈரான் மீதான கடல்வழி முற்றுகை தொடங்கியதிலிருந்து இதுவரை 33 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், 'ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எங்களின் அனுமதியின்றி எந்தவொரு கப்பலும் அங்கு நுழையவோ, வெளியேறவோ முடியாது.சிறிய படகுகளாக இருந்தாலும், ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளைப் பொருத்தும் எந்தவொரு ஈரான் படகையும் சுட்டு வீழ்த்த கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இதில் எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை.மேலும், அமெரிக்காவின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பணியை மும்மடங்கு தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?