பள்ளியில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயது 6 ஆக உயர்வு- அமைச்சர் தந்த விளக்கம்

கேரளாவில் வரும் கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான வயதை 6-ஆக உயர்த்த கேரள மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

Mar 28, 2025 - 17:58
பள்ளியில் 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வயது 6 ஆக உயர்வு- அமைச்சர் தந்த விளக்கம்
school education/pexels

இந்திய அளவில் கல்வியறிவில் முன்னிலை வகிக்கும் மாநிலம் கேரளா. இதனிடையே, வருகிற 2026-2027 கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பில் சேரும் மாணாக்கர்களின் வயதை தற்போது உள்ள 5 வயதிலிருந்து 6 வயதாக உயர்த்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வி.சிவன்குட்டி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து திருவனந்தப்புரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சிவன்குட்டி தெரிவிக்கையில், “நமது மாநிலத்தில் 1 ஆம் வகுப்பில் மாணாக்கர்களை சேர்ப்பதற்கான அடிப்படை வயது 5 என உள்ளது. இதனை 6 ஆக மாற்ற முடிவெடுத்துள்ளோம். பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள், குழந்தைகள் 6 வயதில் தான் முறையான பள்ளி கல்வி பயில தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. அதனால் நமது பாரம்பரிய முறையினை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில், 50 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் ஏற்கெனவே 6 வயதில் தான் பள்ளிக்குச் செல்கிறார்கள். இப்போது கொண்டுவரப்பட உள்ள நடைமுறை மாற்றத்தின் வாயிலாக இதனை மேலும் அதிகரிக்க முடியும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow