சீமானுடன் கைக்கோர்க்கும் திமுக, அதிமுக? விஜய்க்கு எதிரான பலே பிளான்..!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாட்டை திமுக, அதிமுக இரு கட்சிகளும் எடுக்க உள்ளதாகவும், இது பனையூரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, தற்போதைய அரசியல் நிலவரத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியைவிட்டு வெளியேறியுள்ளது.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தங்களது தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்பார்த்த அளவிலான ஆதரவு கிடைக்காது என்ற கணிப்பின் அடிப்படையில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்புகள் சீமானை ஆதரிக்கும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
குறிப்பாக, சட்டப்பேரவையில் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் அரசியல் எழுச்சியை எதிர்கொள்ளும் வகையில் சீமான் வலுவான அரசியல் முகமாக அமையக்கூடும் என்ற மதிப்பீடும் இந்த விவாதங்களுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும், சீமானின் சமீபத்திய பேச்சுகளும் இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில் இருந்ததாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இதனால் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த தகவல்கள் குறித்து சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் தொடர்பான அரசியல் கூட்டணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் வரை அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
இந்த நிலையில், இந்த தகவல் பனையூரை எட்டியுள்ள நிலையில், இது எதிர்பார்த்த்து தான் எனவே கவுண்டர் அட்டாக்கிற்கு ரெடியாக வேண்டும் என்று தவெக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?