சென்னையில் தீவிரவாத அமைப்பின் தலைவருக்கு பேனர்- விசாரணையில் இறங்கிய மத்திய உளவுத்துறை
யாருடைய தூண்டுதலின் பேரில் பேனர் வைக்கப்பட்டது? பேனர் வைத்தவரின் விவரங்கள் குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை பகுதி பள்ளி வாசல் அருகே ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் 'ஹசன் நஸ்ரல்லா'வுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரண்டு இடங்களிலும், ஆயிரம் விளக்கு மசூதி அருகே ஒரு இடத்திலும் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் இடம் பெற்று உள்ள வாசகங்களில் 'உலகத்தின் மாபெரும் வீரன், இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஹிஸ்புல்லா தலைவர் வீர மரணம் அடைந்தார்' எனப் பேனரில் எழுதப்பட்டிருந்தது.
தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தலைவர் நஸ்ருல்லாவிற்கு ஆதரவாக சென்னையில் பொதுமக்கள் கூடும் இடத்தில் பேனர் வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் இந்த 3 பேனர்களையும் சைதாபேட்டையைச் சேர்ந்த ஒருவர் வைத்தது தெரியவந்தது. பின்னர், 3 பேனர்களும் அகற்றப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாருடைய தூண்டுதலின் பேரில் பேனர் வைக்கப்பட்டது? பேனர் வைத்தவரின் விவரங்கள் குறித்து மத்திய உளவுத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?