சர்வதேசப் போட்டிகளில் 400 விக்கெட் - பூம் பூம் பும்ரா

சர்வதேசப் போட்டிகளில் 400வது விக்கெட்டினை வீழ்த்தியுள்ள ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Sep 20, 2024 - 15:59
சர்வதேசப் போட்டிகளில் 400 விக்கெட் - பூம் பூம் பும்ரா
jasprit bumrah

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 3 வது விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா சர்வதேசப் போட்டிகளில் தனது 400வது விக்கெட்டினைப் பதிவு செய்துள்ளார். 

வங்கதேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்தது இந்திய அணி. வங்கதேச அணியின் பவுலிங்கில் இந்திய அணியின் டாப் ஆர்டர் தடுமாறியது. ஜெய்ஸ்வால் 56 ரன்கள் எடுத்திருந்தாலும் கோலியும், ரோஹித்தும் தலா 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க சுப்மன் கில் டக் அவுட் ஆனார். இப்படியான சூழலில் ஆல் ரவுண்டர்களான அஸ்வினும், ஜடேஜாவும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அஸ்வின் சதம் அடித்தார். இப்படியாக முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

அதனைத் தொடர்ந்து ஆடிய வங்க தேச அணி தேநீர் இடைவேளையில் 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த நிலையில் 149 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. இந்திய பந்து வீச்சாளர்களான பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இப்போட்டியில் எடுத்த 3 ஆவது விக்கெட்டின் மூலம் ஜஸ்பிரீத் பும்ரா தனது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தமாக 400 விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 162 விக்கெட்டுகளும், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளும், டி20யில் 89 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இந்த 400 விக்கெட்டுகள் என்கிற சாதனையைப் படைத்திருக்கிறார். ஜஸ்ப்ரித் பும்ராவின் இந்த மகத்தான சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow