போய் வரவா? கடைசி டெஸ்டில் ருத்ர தாண்டவம்.. சதத்துடன் விடைபெற்ற மெக்கல்லம்!
தனது கடைசி டெஸ்டில் மெக்கல்லம் ஆடிய ருத்ர தாண்டவம் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நிற்கின்றது.
2016-ல் டெஸ்டில் தனது இறுதி ஆட்டத்தில் விளையாடிய மெக்கல்லம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக சதத்தை விளாசியதை ரசிகர்கள் சிலாகித்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற டெஸ்டில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 370 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்த நிலையில், களமிறங்கிய மெக்கல்லம், அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் சதமடித்தார்.
இதன் மூலம், 54 பந்துகளில் அதிவேக சதமடித்த விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் மிஸ்பா உல் ஹக்கின் சாதனையை முறியடித்தார்.ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் பர்ன்ஸ், ஸ்மித் இருவரும் சதமடிக்க 505 ரன்கள் குவித்தது.
அடுத்து விளையாடிய நியூசிலாந்து, 335 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. தனது கடைசி டெஸ்டில் மெக்கல்லம் ஆடிய ருத்ர தாண்டவம் இன்றும் கிரிக்கெட் ரசிகர்களின் நினைவில் நிற்கின்றது.
What's Your Reaction?