கணையம் பாதிப்பு....சென்னை அப்போலோ மருத்துவமனையின் எதிரொலி...!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் கணையக் குழாயில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்ட ஒருவருக்கு ரோபோடிக் Frey's Procedure சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.தற்போது நலமுடன் வீடு திரும்பி உள்ளார்.

Jul 29, 2026 - 15:04
கணையம் பாதிப்பு....சென்னை அப்போலோ மருத்துவமனையின் எதிரொலி...!
Apollo Hospitals Chennai

வலியில் கழிந்த 3 ஆண்டுகள்... சரியான சிகிச்சையால் இன்று முழு நிம்மதி!
34 வயது இளைஞனை வாழவிடாமல் செய்த வயிற்று வலியின் உண்மை காரணம்!

மூன்று ஆண்டுகள். பல மருத்துவமனைகள். எண்ணற்ற மருந்துகள். ஆனால் வலி மட்டும் போகவில்லை. 34 வயது இளைஞள் ஒருவன் தன் சொந்த ஊரில் மருத்துவமனைக்கு மருத்துவமனை அவைந்தான். ஒவ்வொரு முறையும் 'வயிற்று எரிச்சல்", "அமிலத் தொல்லை' என சிகிச்சை கொடுத்து அனுப்பினார்கள், வலி குறையவில்லை மாறாக, நாளுக்கு நாள் தீவிரமானது.

வேலைக்கு போக முடியாத நிலை, தூக்கமற்ற இரவுகள், வாழ்க்கையே ஒரு சுமையாய் மாறியிருந்தது. சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் சரியான பரிசோதனை நடந்தது. உண்மை வெளியானது இது வயிற்று எரிச்சல் அல்ல. கணையக் குழாயில் படிந்திருந்த கற்கள்!

3 ஆண்டும் கண்டுபிடிக்கப்படாத காரணம் ?

இந்த இளைஞனை வாட்டியது கிரோனிக் கால்சிஃபிக் பாக்ரியாட்டிடிஸ் படிப்படியாக வீக்கமடைந்து, உள்ளே திரவங்கள் தேங்கி, காலப்போக்கில் கல்லாக மாறி, கணையக் குழாயை அடைத்துவிடும் ஒரு தீவிர நோய் இந்த நோய் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மிகவும் பொதுவானது. கவலைப்படத்தக்க விஷயம் என்னவென்றால், இது குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல சிறு வயதிலேயே எந்தக் காரணமும் தெரியாமல் இந்த நோய் தாக்குகிறது. மரபணு காரணங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, சுற்றுச்சூழல் காரணிகள் எல்லாம் பங்கு வகிக்கின்றன.

இது வயிற்று எரிச்சலா? கணைய வலியா? வித்தியாசம் தெரியுமா?
இங்கே தான் பலரும் தவறு செய்கிறார்கள். இரண்டும் ஒன்றல்ல!

எச்சரிக்கை அறிகுறிகள்:

திடீர் எடை குறைவு எண்ணெய் கலந்த மலம், நீரிழிவு திடீரென தோன்றுதல் இவை கணையம் பழுதடைகிறது என்பதன் அறிகுறிகள் 

தாமதித்தால் என்ன ஆகும்?

இந்த இளைஞனின் 3 ஆண்டு கதை ஒரு பாடம். சரியான பரிசோதனை இல்லாமல் வலி நிவாரண மருந்துகள் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தால் கணையக் கற்கள் மேலும் பெரிதாகும், வடுக்கள் ஆழமாகும். இதன் விளைவாக நிரந்தர நீரிழிவு அப்போலோ மருத்துவமனை கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கௌதம்
கிருஷ்ணமூர்த்தி விளக்கம் நோய் முன்கூட்டியே வரலாம். ஊட்டச்சத்து குறைபாடு தீவிரமாகலாம், வேலை, தூக்கம், வாழ்க்கைத் தரம் எல்லாமே நிரந்தரமாக பாதிக்கப்படும்.

3 நாளில் வீடு திரும்பிய அதிசயம் ரோபோடிக் ஃப்ரே'ஸ் சிகிச்சை, இந்த இளைஞனுக்கு ரோபோடிக் ஃப்ரேஸ் (Robotic Frey's Procedure) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நவீன முறையில் கணையக் குழாயில் இருந்த கற்கள் முழுவதுமாக அகற்றப்படும். கணையக் குழாயில் இருக்கும் அழுத்தம் நீக்கப்படும். ஆரோக்கியமான கணைய திசுக்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் வலி நீங்குவது மட்டுமல்ல நீரிழிவு நோய் வருவதும் தாமதிக்கப்படும், நீண்ட கால ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.  அறுவை சிகிச்சை முடிந்து வெறும் 3 நாட்களில் வீடு திரும்பிய இந்த இளைஞன், 6 மாதங்களாக வலியே இல்லாமல் இயல்பு வாழ்க்கை வாழ்கிறான்.

இந்தக் கதை தரும் செய்தி என்ன?

சாப்பிட்ட பிறகு வயிறு வலிக்கிறது, முதுகுவரை பரவுகிறது" என்று தொடர்ந்து புகார் சொன்னால் அதை தள்ளிப் போடாதீர்கள். சரியான நேரத்தில் சரியான நிபுளரிடம் போவதுதான், இந்த இளைஞனைப் போல், வாழ்க்கையை மீண்டும் பெற ஒரே வழி என்கிறார் பாக்டர் கௌதம் கிருஷ்ணமூர்த்தி இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்.

செய்ய வேண்டியவை:

மேல் வயிற்று வலி 2 வாரத்திற்கு மேல் தொடர்ந்தால் MRCP/CECT பரிசோதனை செய்யுங்கள். கணைய நோய் நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள். குடும்பத்தில் இந்த நோய் வரலாறு இருந்தால் அதை மருத்துவரிடம் தெரிவியுங்கள்.

செய்யக்கூடாதவை:

வலி நிவாரண மாத்திரை களை மட்டுமே நம்பாதீர்கள். சரியான பரிசோதனை இல்லாமல் சிகிச்சையை தொடராதீர்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow