லண்டன் பயணத்தில் விஜய்யின் ‘சுப’ கணக்கு? சங்கீதாவுடன் பேச்சுவார்த்தையில் SAC-ஷோபா..?

முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணத்தில் சில குடும்ப பிரச்னைகள் தொடர்பாக சுப முடிவுகள் எடுக்கப்படலாம் என்று பனையூர் கூடாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. 

Sep 12, 2026 - 17:30
லண்டன் பயணத்தில் விஜய்யின்  ‘சுப’ கணக்கு? சங்கீதாவுடன் பேச்சுவார்த்தையில் SAC-ஷோபா..?

முதலீடுகளை ஈர்ப்பதற்காக செப்டம்பர் 10-ம் தேதி அரசுமுறைப் பயணமாக லண்டன் புறப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பயணம் என்றாலே, அதற்கான வழக்கமான ஏற்பாடுகளும் இருக்கும். தொழில்துறை அமைச்சர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், முதலீட்டுத் தொடர்பான அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள் என ஒரு பெரிய குழுவே முதலமைச்சருடன் பயணிப்பது வழக்கம். 

ஆனால்... இந்த முறை அந்த வழக்கமான ‘டீம்’-க்கு பதிலாக வேறொரு டீம் சென்றிருக்கிறதாம். முதலமைச்சருடன் சென்றிருப்பவர்களின் பட்டியல்தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. வழக்கமான அதிகாரிகள் குழுவுக்குப் பதிலாக, முதலமைச்சர் விஜய்யின் கோர் செல் பாதுகாப்பு அதிகாரிகள், அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் முதலமைச்சருக்கு நெருக்கமான ஜெகதீஷ் ஆகியோர் மட்டுமே உடன் சென்றிருப்பதாகக் கூறப்படுகிறது. விஷ்ணு ரெட்டி, ஆதவ் அர்ஜூனா, மற்றும் பல அதிகாரிகள் போன்றோர் தனியாக சென்றிருக்கின்றனர். இதுதான் இப்போது பனையூர் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் முழுக்க முழுக்க முதலீட்டுக்கானதா? அல்லது இதற்குப் பின்னால் இன்னொரு கணக்கும் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. 

குறிப்பாக முதலமைச்சரின் பெற்றோரும் தனியாக வேறு விமானத்தில் லண்டன் சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், வெளிநாட்டு பயணத்தின் நோக்கம் குறித்து பல்வேறு அரசியல் பேச்சுகள் எழத் தொடங்கியிருக்கின்றன. முதலீடுகளை ஈர்ப்பது என்பது பயணத்தின் அதிகாரபூர்வ நோக்கமாக இருந்தாலும், அதற்கு அப்பாற்பட்டு சில முக்கியமான தனிப்பட்ட விவகாரங்களிலும் சுமுகமான முடிவுகளை எடுக்க திட்டமிடப்பட்டிருப்பதாக பனையூர் வட்டாரத்தில் தகவல்கள் கசிகின்றன.

முதலீடு ஒரு பக்கம்... ‘சுப’ முடிவு இன்னொரு பக்கமா?

முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் பயணத்தில் இடம்பெற்றிருப்பதும், குடும்பத்தினரும் லண்டன் சென்றிருப்பதாகக் கூறப்படுவதும் இந்தச் சந்தேகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாகச் சொல்கிறார்கள்.

அதிலும், தமிழ்நாடு அரசியலில் தவெகவைச் சுற்றி ஏற்கெனவே பல்வேறு அரசியல் கணக்குகள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், முதலமைச்சரின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

லண்டன் பயணத்தின் அதிகாரபூர்வ அஜெண்டா முதலீடுகளை ஈர்ப்பது என்றாலும்... அங்கே நடக்கப்போகும் ‘சில சந்திப்புகள்’தான் இப்போது பனையூர் அரசியலில் ஹாட் டாபிக். அதாவது, குடும்ப பிரச்னைகள் தொடர்பாக, முதலமைச்சரின் மனைவி சங்கீதாவுடன் எஸ்.ஏ.சந்திரசேகரும், ஷோபாவும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும், இந்த சந்திப்பு நீண்ட கால குடும்ப பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், “இந்தப் பயணத்தில் சில சுமுக முடிவுகள் எடுக்கப்படலாம்” என்ற பேச்சு மட்டும் பனையூர் வட்டாரத்தில் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. லண்டன் பயணம் முடிந்து முதல்வர் திரும்பும்போது... முதலீட்டு அறிவிப்புகளுடன் வேறு ஏதாவது ‘சுப’ செய்தியும் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow