உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு  

“8 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் சுற்றுலா தளம் மற்றும் சலையோர பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை

Dec 1, 2023 - 12:26
Dec 1, 2023 - 13:40
உலக பாரம்பரிய சின்னமாக வீராணம் ஏரி அறிவிப்பு  

கடலூர் மாவட்டத்தில் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள  நடைபெற்றது.இந்தியாவில் 75 நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய புராதன சின்னங்களாக உலகளாவிய நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதை கொண்டாட மத்திய நீர்ப்பாசனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தமிழகத்தில் கல்லணை, கீழணை, வீராணம் ஏரி புராதன சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டதால், விழிப்புணர்வுப் பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது இந்த வீராணம் ஏரி கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய எரியக இருந்து வருகிறது. டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், இந்த ஏரியின் தண்ணீரை சம்பா விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இந்த ஏரி மூலம் ராஜஸ்தா  மோட்டார்கள் மூலம் சென்னை மாநகரின் குடிநீருக்கு இந்த தண்ணிர் முக்கிய ஆதாரமாகவும் விளங்கி உள்ளது. இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியின் நீலம் 14 கி.மீ நீளமுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர்188 கி.மீ பயணித்து கல்லணைக்கு வந்து சேர்ந்து, கல்லணையில் இருந்து கொள்ளிடத்தின் வழியாக 81 கி.மீ பயணித்து, கீழணையை வந்தடைந்து, வடவாறு வழியாக 22 கி.மீ பயணித்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து அடையும் நிலை உள்ளது.வீராணம் ஏரியின் பிரதான கரையின் மொத்த நீளம் 16 கி.மீ. ஏரியின் மொத்த சுற்றளவு 48 கி.மீ. ஏரியின் மொத்த அகலம் 5.6 கி.மீ. ஏரியின் பரப்பளவு 15 சதுர மைலாக உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்ட அளவு 47.50 அடியாகும். 

ஏரியின் கிழக்கு கரையில் 28 மதகுகள் மூலமாகவும், மேற்கு கரையில் 6 மதகுகள் மூலமாகவும் விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஏரியின் மூலம் சுமார் 1000ற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி செய்யும் தொழிலை நடத்தி வருகின்றனர். இந்த ஏரி தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வகையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது  பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் கூறுகையில்,   “8 கோடி மதிப்பீட்டில் வீராணம் ஏரியில் சுற்றுலா தளம் மற்றும் சலையோர பூங்கா அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் இடம் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் மாவட்ட ஆட்சியர் மாணவர் மத்தியில் உரையாற்றிய போது, "கல்வி ஒன்றே முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் நன்கு படித்து அரசு முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளை  அடையவேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர் சுவேதாசுமன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், ரமேஷ், அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow