எழுதி கொடுத்ததை வாசிக்கும் முதல்வரே பல தவறுகளை செய்கிறார்- பிரேமலதா காட்டம்

தவறு யார் செய்தாலும், சகஜம் அதை மன்னிக்க வேண்டும், எல்லாவற்றையும் திமுக அரசியலாக்குவது கண்டனத்திற்குரியது.

Oct 21, 2024 - 12:20
எழுதி கொடுத்ததை வாசிக்கும் முதல்வரே பல தவறுகளை செய்கிறார்- பிரேமலதா காட்டம்

எழுதி கொடுத்ததை வாசிக்கும் முதல்வரே பல தவறுகளை செய்கிறார், சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் என்ன தேதி என்பது கூட தெரியாமல் முதல்வர் பேசியது இன்றும் பார்க்க முடியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

 திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில், தேமுதிக நிர்வாகி மறைவிற்கு வருகை புரிந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுச்செயாலளர் பிரேமலதா,  தற்போது திராவிடநல் திருநாடும் என்னும் ஒரு வாக்கியம் நீக்கப்பட்டதற்கு, ஆளுநரை எதிர்த்து திமுகவினர் பல கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.

விஜயகாந்தை பொறுத்தவரை அன்னை மொழியை காப்போம், அனைத்து மொழியை காப்போம். நமக்கு தமிழ்தாய் வாழ்த்து மிக முக்கியம். ஆனால் கவர்னர் பாடவில்லை, நடப்பது தூர்தர்ஷன் நிகழ்ச்சி, யாரோ ஒரு அம்மா தான் பாடுகிறார்கள், மொத்த பழியையும் எடுத்து கவர்னர் மீது போடுவது தவறானது. எந்த சாக்கு கிடைக்கும், யார் மீது பழி போடலாம் என்ற ஆட்சியாளர்கள் எல்லாவற்றையும் அரசியலாக்குகின்றனர். அது தவறு. அதற்கு தூர்தர்ஷன் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள், ஆனால் கவர்னரை நீக்க வேண்டும் என கொச்சை வார்த்தையில் பேசுவது தவறானது.

அப்படி பார்த்தால், நமது முதல்வர் எழுதி கொடுத்ததை வாசிக்கும் போது, பல தவறுகளை செய்கிறார், அதுமட்டுமில்லாமல் குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும், என்ன தேதி என்பது கூட தெரியமால் அவர் பேசியது சமூக வலைதளங்களில், இன்றும் பார்க்க முடியும்.

தவறு யார் செய்தாலும், சகஜம் அதை மன்னிக்க வேண்டும், எல்லாவற்றையும் திமுக அரசியலாக்குவது கண்டனத்திற்குரியது.மேலும் ஒரு நாள் மழைக்கு சென்னை தாங்கவில்லை, 4 ஆயிரம் கோடி, 5 ஆயிரம்  கோடி ஒதுக்கியிருப்பதாக கூறுகிறார்கள், அந்த காசு எங்கே சென்றது என தெரியவில்லை. 

சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க அனைத்து சாலைகளும் மிக மோசமாக உள்ளது. வாய் வார்த்தையிலும், போட்டோ சூட் செய்வதிலும்,  மக்களுக்கு எந்த பயனும் இல்லை, டிசம்பர் பெருமழைக்கு, அரசு தயாராக வேண்டும். 

தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு பொதுமக்கள் செல்ல  போதுமான பேருந்து வசதி இல்லை, இருக்கின்ற பேருந்தும் தரமில்லை, தண்ணீர் ஒழுகியும், டயர் வெடித்தும் என பல பிரச்னைகள் உள்ளது.

இவர்கள் தனியார் பேருந்தை வாடகையிற்கு எடுக்கிறார்கள், அரசாங்கம் மற்றவர்களை நம்புகிறார்கள் என்றால் எழுதி கொடுத்துவிட்டு போகவேண்டியது தான், இது வாடகை அரசாக தான் பார்க்க முடிகிறது.

 ஆம்பூரில் உள்ள சர்க்கரை ஆலை முற்றிலும் நலிவடைந்துள்ளது. தற்போது பாலாறு காடு போன்று உள்ளது. சரியாக பாலாற்றை தூர்வாறுவதில்லை, பெருவெள்ளம் வருவதற்கு முன் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பாலாற்றை தூர்வார வேண்டும். 

அடுத்த தேர்தலை பற்றி யோசிக்கும் அரசாக இருக்கின்றதே தவிர, மக்களை பற்றி யோசிக்காத அரசாக இன்றைய அரசு உள்ளது.மக்களும் மாற அரசும் மாற 2026 ஆம் ஆண்டு அமையும். 

மேலும், ஆம்பூரில்  உள்ள தோல் தொழிற்சாலைகள், சர்க்கரை ஆலைகள் படிப்படியாக மூடப்படுவதால் எதை நம்பி ஆம்பூர் சுற்றுவட்டார மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மு.க.ஸ்டாலின் துபாய், லண்டன், அமெரிக்கா சென்று தொழில்களை ஈர்த்துக்கொண்டு வருகின்றேன் என போகிறார், இதுவரையில் எதை ஈர்த்து வந்துள்ளார்.இவர்கள் வெறுமனே குடும்பத்துடன் சுற்றுல்லா செல்ல நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அதை அரசாங்க பணத்தில் செலவு செய்து, அதில் ஆதாயம் தேடுகிறார்கள். 

 இதுவரையில் எவ்வித தொழிற்சாலையும் வரவில்லை, வேலை வாயப்பும் வழங்கவில்லை. மேலும், ஆம்பூரில் நலிவடைந்த தொழிற்சாலைகளை சரிசெய்து மக்களின் வாழ்வாதாரத்தை சரிசெய்ய வேண்டும் என்பது அரசின் கடமை என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow