Mutton stew: கேரளா ஸ்டைலில் சுவையான ‘மட்டன் ஸ்டூ’ - ஈஸியா செய்ய சூப்பர் வழி!

இடியாப்பத்துடன் மட்டன் ஸ்டூ என்பது செம காம்போ. அந்த வகையில் சுவையான மட்டன் ஸ்டூ செய்முறை குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.

Mar 24, 2025 - 11:51
Mutton stew: கேரளா ஸ்டைலில் சுவையான ‘மட்டன் ஸ்டூ’ - ஈஸியா செய்ய சூப்பர் வழி!
Mutton stew recipe

அசைவ பிரியர்கள் மத்தியில் மட்டனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் மட்டனை வைத்துக்கொண்டு என்னடா புதுசா பண்ணலாம்? என யோசிப்பவர்களுக்கு இந்தப்பகுதியில் சுவையான ”மட்டன் ஸ்டூ” செய்முறை குறித்து விளக்கியுள்ளோம். மட்டன் ஸ்டூ கேரளாவில் புகழ்பெற்ற ஒரு உணவு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள்: மட்டன் - 500 கிராம், வெங்காயம்-2 (நறுக்கவும்), பச்சைமிளகாய் -5 (நறுக்கவும்), இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்), பூண்டு- 5-6 பற்கள் (நறுக்கவும்), கறிவேப்பிலை - ஓர் இணுக்கு, கிராம்பு, ஏலக்காய் - தலா 3, பட்டை - 1 துண்டு, தேங்காய்ப்பால் 1 கப், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், உப்பு - சுவைக்கேற்ப.

செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவி, வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி, கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து, வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை வதக்கி, மட்டன் சேர்த்து, நன்றாகக் கிளறவும். அடுத்ததாக, மஞ்சள்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, 5 நிமிடங்கள் வதக்கவும். பின்னர், 2 கப் தண்ணீர் ஊற்றி, கறிவேப்பிலை சேர்த்து, பாத்திரத்தை மூடி வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 30 - 40 நிமிடங்கள் வேகவிடவும். மட்டன் நன்றாக வெந்து மென்மையாகிவிட்டால், தேங்காய்ப்பால் ஊற்றி, மறுபடியும் 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால், சிறிதளவு உப்பு சேர்த்து, அடுப்பிலிருந்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு: இது, கேரளா ஸ்டைல் ரெசிபி. இடியாப்பம் / புதினா சாதத்துடன் சூடாகப் பரிமாறலாம். இதுப்போன்ற மேலும் சமையல் குறிப்புகளுக்கு நீங்கள் குமுதம் குழுமத்தில் வெளியாகும் சிநேகிதி இதழை சப்ஸ்கிரைப் செய்து பயடையுங்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow