அறிவாலயத்தில் Entry கொடுக்கும் மருமகன்...கடும் அப்செட்டில் மகன்!
நிர்வாக ரீதியாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மகனா? மருமகனா? என்ற நெருக்கடியில் திமுக தலைமை தவித்து வருவதாக கூறப்படுவது தான் அறிவாலயத்தில் இன்றைய ஹாட் டாபிக்.
சட்டமன்றத் தேர்தல் திமுகவின் தோல்விக்கு பென் நிறுவனத்தின் தேர்தல் வியூகங்களே காரணம் என்றும் இதனால் பல கட்சி நடவடிக்கைகளில் பென் நிறுவனம் தலையிடக் கூடாது என்றும் தலைமைக்கு கோரிக்கை வைத்தனர்.
இனி உதயநிதி சொல்வதை கேளுங்கள் இளைஞர்கள் தான் கட்சியின் நாளைய எதிர்க்காலம் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தனர்.
இதனால் பென் நிறுவனத்தையும் அதன் உரிமையாளரான மருமகனையும் தலைமை தள்ளி வைத்ததாக கூறப்பட்டது.இந்நிலையில்மீண்டும் மருமகனுக்கு கட்சி தலைமை முக்கியத்துவம் அளித்து வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் உதயநிதி டீம்மையும் உண்மையான உடன்பிறப்புகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மீண்டும் மருமகன் கால் எடுத்து வைக்க போவதை நினைத்து மகன் அப்செட்டில் இருக்கிறாராம் அப்படி என்னதான் விவகாரம் பார்போமா?
தேர்தல் தோல்வியிலிருந்து எப்படியாவது கம்பேக் கொடுத்தே தீர வேண்டும் என்பதற்காக, இரவு பகல் பாராமல் தீயாய் வேலைப்பார்த்து கொண்டிருக்கிறது திமுக. அதற்கு ஃபர்ஸ்ட் ஸ்டெப் தான் அண்மையில் கூடிய திமுக செயற்குழு கூட்டத்தை கூட்டியது.
முன்னதாக தங்கம் தென்னரசு தலைமையில் தொகுதி வாரியாக ஆய்வு நடத்த 38 குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் அறிக்கையை சமர்பிக்க தலைமை உத்தரவிட்டது. இந்த அறிக்கையை ஆய்வு செய்த திமுக தலைமை இனிமே அமைதி இருந்தா சரிவராது ஆக்ஷினில் இறங்கிட வேண்டியது தான் என்று முடிவெடுத்துள்ளதாம்.
அதன்படி கட்சியின் கட்டமைப்பை மாற்ற 9 தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டுள்ளனர்.
கம்பேக் கொடுப்பதில் நாங்கள் வல்லவர் என்றெல்லாம் தலைவர் பஸ்டையலாக்கை எல்லாம் விட்டு செயற்குழு கூட்டத்தில் 9 தீர்மானங்களை நிறைவேற்றி நல்ல படியா முதற்கட்டத்தை முடிச்சு வைத்திருக்கறாராம்.
இங்க தான் ட்விஸ்ட் ஏற்கனவே தேர்தல் வியூங்ககளில் மருமகன் தலையிட்டதால் இந்த தோல்வி என்று சீனியர்கள் குமுறினார்கள்.
இதனிடையே தலைமையின் மகனுக்கும் மருமகனுக்கும் மோதல் போக்கு தொடர்வதாகவும் இதற்கு காரணம் மகனின் அரசியல் ஆலோசகரான சுனிலுடன் நெருக்காட்டி வருவதால் மருமகன் கடும் அப்செட்டில் இருக்கிறாராம்?
"உட்கட்சி விவகாரங்களை ஒருமாதிரி சமாளித்துவிட்டாலும், செயற்குழு தீர்மானங்கள் அனைத்தையும் மாப்பிள்ளை சரிபார்த்து 'டிக்' அடித்திருக்கிறறராம். அது மட்டுமல்ல, தவெ.க.வை இஞ்ச் பை இஞ்சாக களத்தில் எப்படி வீழ்த்துவது எனவும் 'ஃடிராப்ட் தயாரித்து, கட்சி தலைமையிடம் presentation செய்திருக்கிறாராம்.
குறிப்பாக அறிவாலயத்தில் உலவும் சில கருப்பாடுகள், சீனியர்கள் சிலரை கையில் வைத்துக்கொண்டு கட்சியின் ஒவ்வொரு மூவ் குறித்து கசியவிடுவதையும் கண்டுபிடித்தால் கட்சியில் சில அதிரடி முடிவுகளை அமல்படுத்த வேண்டும் என்று மருமகன் மாமனிடம் காராக கூறவிட்டாராம்.
எனவே கட்சி மட்டுமல்ல, அறிவாலயத்திலும் பல அதிரடி மாற்றங்களை அமல்படுத்த வேண்டும் என தலைமையிடம் கறாராக கூறியிருக்கிறார். இதனிடையே, விரைவில் அவருக்கு அறிவாலயத்தில் தனி அறையும், கட்சியில் புதிய பொறுப்பும் வழங்கப்படலாம் என்கிறார்கள். இதில் இன்னொரு கணக்கும் சொல்கிறார்கள். உதயாவைபோல ஒருவேளை மாப்பிள்ளையையும் ஆளும்கட்சி கைது நடவடிக்கை மூலம் சீண்டினால், கட்சி அவருக்காக குரல் கொடுக்கும்போது விமர்சனம் எழாமல் இருக்கவும் இந்த பதவி உதவும் என கணக்குப் போடுகிறது தலைமை. இதன் மூலம் மொத்த அறிவாலயத்தையும் மாப்பிள்ளை கையிலெடுக்கிறார் என்கிறார்கள்.
ஆனால், சபரீசன் நேரடியாக கட்சியில் தலையிடுவதற்கு வழியேற்படுத்தி தருவதை உதயநிதி விரும்பவில்லையாம். ஆனால் ஸ்டாலினும், துர்காவுமே உதயநிதியை சமாதானப்படுத்தி, சபரீசனுக்கு வழி ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள் என்கிறார்கள். ஆனாலும், மகன் கடும் அப்செட்டில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?