படம் முழுக்க முகத்தையே பார்த்துக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்கும் அளவுக்கு எமோஷனுக்கு தகுந்த எக்ஸ்பிரஷன்களை முகத்தில் அள்ளி கொட்டியிருக்கிறார் அதிதி சங்கர்... ஆனால் சொந்த வாழ்க்கையின் சொல்லப்படாத விரக்தி ஒன்று அதில் எப்போதும் ஒளிந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்... அர்ஜுன் தாஸ் படம் முழுக்க ஒரே மாதிரி வருகிறார், குரலும் தான்,,, தேவதர்ஷினிக்கு ஷோபாவே சுகம், எந்திரிக்கவே இல்லை. சித்ரா லட்சுமணன் இயல்பு... நாயகன், நாயகியின் குடும்பம் கலகலப்பு.
தமிழ் சினிமாவில் பெண்களை கேவலப்படுத்த வரும் வழக்கமான டயலாக்... “என்ன நீ ஏத்துப்பியா?” ன்னு ஒரு அரகண்ட் ஹீரோவிடம் அன்பான ஹீரோயின் கெஞ்சுவது தான். இயக்குநரின் இயல்பான ஆம்பிளை திமிர் தானாக வெளிப்படும் இடம்... விக்னேஷ் ஸ்ரீகாந்தும் விதிவிலக்கல்ல... பெண்ணியம் பேசும் ஹீரோயின்களுக்கு கூட இந்த ஒரு வரி டயலாக்கை பேச மாட்டோம் என்று சொல்ல துணிச்சலும், புரிதலும் இல்லை என்பது தான் பரிதாபம்.
அரவிந்தன் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு ஓ.கே. ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பின்னணி இசையும், பாடல்களும் ஓவர் டோஸ், வயலினே அழுதிருக்கும்... கொஞ்சமாவது கேப் விட வேண்டாமா?அர்ஜுன் தாஸின் முதல் காதலும், காதலியும், அது நிறைவேறாமல் போனதுக்கும், அதற்காக அவர் எட்டு வருடம் உம்மணா மூஞ்சியாக திரிந்ததற்கும் சொல்லப்படும் காரணம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள ரசம் மாதிரி கொஞ்சம் கூட மனதை தொடவில்லை. அதேபோல், அதிதியின் அதீதமான காதலிலும் பேஸ்மெண்ட் ரொம்ப வீக்...
சர்ச்சுக்குள் என்ன தற்கொலையா செய்து கொள்ள முடியும்..? கிளைமேக்ஸில் அதிதியை தேடி சர்ச்சுக்கு வரும் அர்ஜுன் எதற்கு அரக்க பரக்க ஓடி வருகிறார் என்று தான் புரியவில்லை. காரில் காதலியை தேடிக் கொண்டு வருபவர் காரணமில்லாமல் காருக்குள் கத்துவதும், காரை ஒரு பாலத்தில் ஓரமாக நிறுத்திவிட்டு, இறங்கி வந்து பாலத்தின் கைப்பிடி சுவரை பிடித்துக் கொண்டு ஃபிளாஷ்பேக்குக்குள் மூழ்குவதும் செம காமெடி... காரில் உட்கார்ந்து கொண்டே நினைத்தால் நடந்தது ஞாபகம் வராதா என்ன?