Good Bad Ugly.. இன்று ஒரே நாளில் அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
அஜித், த்ரிஷா, சிம்ரன் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் ஷிந்தி மொழி டிரைலர் இன்று வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் அஜித் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றும், கேங்ஸ்டர் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் ஏராளமான மாஸ் தருணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அண்மையில் நேர்காணல் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.
தமிழ் டிரைலருக்கு அமோக வரவேற்பு:
குட் பேட் அக்லி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அதன் டிரைலர் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியானது. விண்டேஜ் அஜித் குமார் நடித்த பல படங்களின் ரெபரன்ஸ் காட்சிகள் டிரைலரில் தூக்கலாக இருந்தது. இது அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்தது. இதுவரை இந்த டிரைலர் யூ-டியூப் வலைத்தளத்தில் மட்டும் 38 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.
இந்நிலையில் குட் பேட் அக்லி திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் ஹிந்தி டிரைலர் இன்று வெளியாகும் என படத்தயாரிப்புக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இன்று வெளியாகும் மற்ற மொழி டிரைலர் நிச்சயம் அஜித் படங்களுக்கு, மற்ற மாநிலங்களிலும் வெளியீடு அன்று வசூலில் நல்ல ஓபனிங் தர உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள 2 பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பினை தூண்டியுள்ள நிலையில், டிரைலரில் இடம்பெற்ற ரீ-மிக்ஸ் பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
#GoodBadUgly
Telugu Trailer Today at 11:34 AM
What's Your Reaction?






