பிள்ளைகள் பாதுகாப்பு.... யார் பொறுப்பு?
சமீபகாலமாக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன.குழந்தைகளின் பாதுகாப்பு யார் பொறுப்பு என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசியதை பார்போம்.
பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருப்பது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகங்கள், அரசு அதிகாரிகள் என ஒவ்வொருவரின் பொறுப்பும் என்ன, அவர்கள் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறியது, பாலியல் வன்கொடுமை தொடர்பாக முதலில் சட்டத்திருத்தம் தேவை. அதன் பிறகு குழந்தைகள். பெற்றோர்கள். பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளின் பங்களிப்பைப் பற்றி பார்க்கலாம்" என்று கூறித் தொடங்கினார். "பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது, ஒரு சமூகம் பண்பட்டதற்கான முக்கிய அடையாளமாகும். எந்தக் குற்றத் தையும் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் சூழலே குற்றங்களை ஊக்குவிக்கிறது.
பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளானால், அந்தக் கல்வி நிறுவனத்தை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற அச்சம் நிலவினால், எந்தப் பள்ளியிலும், கல்லூரியிலும், பல்கலைக்கழகங்களிலும் பாலியல் வன்கொடுமைகள் நிகழ வாய்ப் பில்லை.
வன்கொடுமை நிகழும்போது அதை சகித்துக் கொள்ளும் மனநிலை இருப்பதோ, தனது பணியிடத்தில் நடந்த குற்றத்தைத் தடுக்க முற்படாமல், குற்றவாளியைக் கண்டிக்காமல், குற்றம் நிகழ்ந்தது குறித்து எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் அமைதியாகக் கடந்து செல்வதோ, குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறது. ஒருவர் குற்றம் புரிந்து தப்பிப்பதைப் பார்க்கும் மற்றொருவர் அத்தகைய குற்றத்தைத் துணிந்து செய்யத் தூண்டப்படுகிறார்.
சக மாணவர்கள். சக ஊழியர்கள், சக ஆசிரியர்கள் இத்தகைய குற்றங்களில் அமைதி காப்பது அல்லது குற்றம் சாட்டப் பட்டவருக்கு இரக்கம் காட்டுவது கூட. குற்றத்தை ஊக்குவிக்கும் செயலாகும் என்பதை உணர்த்தும் வகையில் உரிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். அமைதி காக்கும் அல்லது குற்றவாளியைத் தப்பிக்க வைக்க முயற்சிக்கும் நபர்கள் அனைவரும் குற்றத்தை ஊக்குவித்தவர்களாகக் கருதி தண்டனை வழங்கும் வகையில் சட்டங்களைத் திருத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவரையே குற்றவாளி போல் விசாரிப்பது, நீ ஏன் அங்கு சென்றாய்?", 'நீ ஏன் அந்த நபருடன் பழகினாய்?" போன்ற கேள்விகளை எழுப்புவது ஆகிய செயல்களும் குற்றத்திற்கு உடந்தையாகக் கருதி சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும். இதை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். தொடர்ந்து, பெற்றோர்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
பெற்றோர்கள் செய்ய வேண்டியது
குழந்தைகளுடன் தினமும் பேச வேண்டும். பெண் குழந்தைகளிடம் மட்டுமல்ல, ஆண் குழந்தைகளிடமும் பேச வேண்டும். அவர்கள் டீன் ஏஜ் வயதில் இருந்தாலும், அவர்கள் இன்னும் குழந்தைகள்தான். எப்போதும் விசாரணை போல அல்லாமல் உரையாடல் போலவே பேச வேண்டும்.
"கிளாஸ்ல எப்படி போச்சு?'", ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் எப்படி இருக்காங்க, டீச்சர்ஸ் என்ன சொல்றாங்க? பாடம் தாண்டி வேறு என்னலாம் நடந்தது? போன்ற மகிழ்ச்சியான உரையாடல்களாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளிடம் கேள்விகளாக விசாரணை யாகக் கேட்டால் அவர்களுக்கு சந்தேகம் வரும். ஆனால், மகிழ்ச்சியாக சாதாரணமாக உரையாடும்போது அவர்களும் இயல்பாகவே நடந்தவற்றை சொல்வார்கள். பிள்ளைகள் பள்ளியில் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதும் அவசியம். மாதம் ஒருமுறை ஆசிரியர்களைச் சந்தித்து குழந்தைகளின் நிலையை அறிந்துகொள்வதன் மூலம், பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள் இருவரிடமும் பெற்றோர்கள் சுவனம் செலுத்துகிறார்கள் என்ற எண்ணம் உருவாகும்.
பிள்ளைகளிடம் தினமும் உரையாடும் போது, அவர்களுக்கு எங்காவது அசௌ கரியம் ஏற்பட்டால் அதை அவர்கள் வெளிப் படையாக பகிர்ந்து கொள்வார்கள். அப்படி பகிரும்போது, 'நீ என்ன செய்தே?", "நீ ஏன் அங்கு போனாய்? போன்ற குற்றம் சாட்டும் கேள்விகளைத் தவிர்த்து, அவர்கள் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக பள்ளியில் சக மாணவர் களால் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், அல்லது வேறு சிக்கல்களை எதிர்கொண்டால், அவர்கள் அறியாமல் ஆசிரியர்களிடம் சென்று ஆலோசிக்கலாம். அதற்குப் பிறகும் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கவில்லை, பிள்ளை தொடர்ந்து அதே சிக்கலை எதிர்கொண்டால்,பள்ளி அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். தொடர்ந்து முதல்வர், சேர்மன் வரை கொண்டு செல்லலாம் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (CEO) வரை சென்றும் கூட புகார் அளிக்க முடியும்.
இருபாலரை உட்கார வைட் சொல்வது தே கூடிய நட்பாகவே வெளிச் சூழல்களில் ஏற்பட்ட பிரச்னைகளாக இருந்தால், பெற்றோர் கவனமாக நிலைமையைப் புரிந்துகொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலம், அவர்கள் எந்தச் சூழ்நிலையையும் திறம்பட சமாளிக்கக் கற்றுக்கொள்வார்கள்.
பள்ளிகள் செய்ய வேண்டியது
பள்ளிகள் முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பிள்ளைகள்தான் குழந்தைகள் என்று நினைக்கக் கூடாது. பள்ளிப் பருவம் முடியும் 18 வயது வரை அவர்களும் குழந்தைகள்தான். ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் இருவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவோ பழகிக்கொள்ளவோ கூடாது என்று கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, அவர்களின் வயது மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, "ஏன் பேசக் கூடாது? என்ற எதிர்ப்பு உணர்வும், எதிர்பாலினரின் மீது தேவையற்ற ஈர்ப்பும் உருவாகும் வாய்ப்பு உள்ளது.
அதனால் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்று வேறு படுத்தி அவர்களுக்குள் பிரிவுணர்வை விதிக்கக் கூடாது. எல்லா பிள்ளைகளும் எல்லோருடனும் இயல்பாகப் பேசிக் கொள்ளும் சூழல் உருவாக்-யும் கலந்து ப்பது. சாப்பிட தாழமையுடன் இயல்பான இருக்கும்.
கப்பட வேண்டும். ஆ பிள்ளைகள் அண்ணனோ, தம்பியோ: பெண் பிள்ளைகள் அக்காவோ, தங்கையோ என்ற எண்ணத்தையும் நட்பையும் பள்ளிக் குள்ளேயே வளர்க்க வேண்டும்.
ஆண். பெண் மாணவர்களை தனித் தனியாக நிற்கச் சொல்லுவது, தனி யாக அமர வைப்பது. உணவு சாப்பிடச் சொல்வது போன்றவற்றைத் தவிர்த்து இருபாலரையும் கலந்து உட்கார வைப்பது, சாப்பிடச் சொல்வது தோழமையுடன் கூடிய இயல்பான நட்பாகவே இருக்கும். ஒரு பள்ளி தாளாளராக நானும் நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கின்றேன். இப்படி வளரும் பிள்ளைகள், வெளி உலகிலும் அவர்கள் ஒருவரை ஒருவர் மரியாதையுடன், இயல்பாக அணுகும் மனநிலையுடன் வளர்வார்கள்.
பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டியது என்ன?
பிள்ளைகள் பள்ளிகளிலும், வெளி இடங்களிலும் சுதந்திரமாகச் செயல்படலாம் ஆனால், அவர்களின் அனுமதி இல்லாமல் உடலைத் தொட்டு பேசுவது அல்லது அசௌகரியமாக உணரும்படி நடந்து கொள்வது கண்டிப்பாக அனுமதிக்கப்படக் கூடாது என்பதை பெற்றோர்களும், அவ்வப்போது நிபுணர்களை அழைத்து பள்ளிகளும் கவுன்சிலிங் மூலம் கற்றுத்தர வேண்டும் பொதுவாக 'குட் டச் பேட் டச் என்பதை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், எப்போது அசௌகரியம் என்னும் உணர்வை எதிர்கொள்கிறீர்களோ அப்போதே அது தவறானது என்பதை பிள்ளைகள் புரிந்துகொள்ளும் வகை யில் சொல்லித்தர வேண்டு ம்
ஒருவரின் பார்வை, சொல், செயல் அல்லது தொடுதல் போன்ற எதுவாக இருந்தாலும் அது அசெளகரியமாக உணரப்பட்டால், பிடிக்காவிட்டால் உடனடியாக நம்பிக்கைக் குரியவரிடம் தெரிவிக்க வேண்டும் நீங்கள் தப்பு செய்துவிட்டதாக அழக்கூடாது என்பதையும் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
மேலும், அசம்பாவிதச் சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது. மிரட்டல்களை எவ்வாறு சமாளிப்பது, முன்கூட்டியே புகார் அளிப்பது எப்படி போன்றவற்றுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட வேண்டும். இது பள்ளி மட்டுமல்ல. கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கும் கட்டாயமாக பொருந்தும். அவசர சூழலில் உதவி தேவைப்பட்டால், 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்பதையும் குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும்.
பள்ளிகள் நடைமுறைப்படுத்த வேண்டியது
பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்க, புகார் பெட்டி, மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் ஆகிய வசதிகள் ஒவ்வொரு கல்வி வளாகத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றை அவ்வப்போது சரிபார்த்து, மாணவர்கள் பாதுகாப்புடன் உள்ளார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும். இதற்கென தனி பொறுப்பாளர் நியமிக்கப்பட வேண்டும் மேலும், பள்ளியில் மட்டுமல்லாமல், பள்ளிக்கு வரும் வழியில் அல்லது பள்ளி வாகனங்களில் ஏற்படும் பிரச்னைகளையும் மாணவர்கள் அந்தப் புகார்பெட்டியில் தெரிவிக்கலாம். என்றும் அறிவுறுத்த வேண்டும்.
ஒவ்வொரு கல்வி வளாகங்களிலும் POSH POCSO சட்டத்தின் அடிப்படையில் கல்வி வாளாகங்களில் அனைவருக்கும் தெரியும் வகையில் குற்றங்கள், புகார் தரும் நடைமுறை. விசாரணை அதிகாரிகள். தண்டனை விவரம் ஆகியவற்றை பெரிய எழுத்துகளில் எழுதி வைக்க வேண்டும். அதை பிள்ளைகள் படித்து என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை வகுப்புகளில் கேட்கலாம்.
ஒவ்வொரு வளாகத்திலும் உள் விசாரணைக் குழு (ICC) அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் அதன் விவரம் அனைவரும் அறியும் வகையில் எழுதி வைக்க வேண்டும். மாவட்ட விசாரணைக் குழு குறித்த தகவல் எழுதி வைக்க வேண்டும்.
அரசு செய்ய வேண்டியது
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு (Child Protection Officer), குழந்தைகள் நல அலுவலர் (Child Welfare Officer), மகளிர் உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகள் / அலுவலர்கள் மாதத்திற்கு ஒரு முறையாவது ஒவ்வொரு பள்ளியையும் பார்வையிட்டு அங்கிருக்கும் சூழலை கண்காணிக்க வேண்டும். அதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்கிட வேண்டும்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கவும். குற்றம் நிகழ்ந்தால் உரிய விசாரணை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய, பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, காவல் துறை ஆகியவற்றுக்கிடையில் வட்டார, மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.
பிள்ளைகள் பாதுகாப்பாகச் சுதந்திரமாகச் சுற்றித் திரிவது பெற்றோர்கள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகம் ஆகிய அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை உணர்ந்து முறையில் திட்டமிட்டுச் செயல் பட்டால், எதிர் காலச் சந்ததியினர் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வளர முடியும்.
What's Your Reaction?













