நீங்கள் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டை- விஜய்யை கடுமையாக சாடிய சீமான்

தமிழ் தேசியம் திராவிடத்திற்கு நேர் எதிர் இரண்டும் எப்படி ஒன்றாகும். தமிழ் தேசியம் தமிழ்நாடு பிறந்தநாளை கொண்டாடும். தமிழ்நாடு என பெயர் வைத்ததை திராவிடம் கொண்டாடும். இதில் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றா என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பினார்.

Nov 2, 2024 - 10:35
நீங்கள் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டை- விஜய்யை கடுமையாக சாடிய சீமான்

நீங்கள் பேசுவது கொள்கை அல்ல, கூமுட்டைத் தனமானது என தவெக தலைவர் விஜய்யை சீமான் மறைமுகமாக சாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி நாடு முழுவதும் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது.அந்த வகையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்கள் இந்த நாளை மாநிலங்கள் மாநிலம் உருவான நாளாக கொண்டாடி வருகின்றன. 

இந்த நிலையில், நவம்பர் 1ம் தேதியான நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் தமிழ்நாடு நாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நாளை முன்னிட்டு நாதக சார்பில் சென்னை பெரம்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சீமான் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக தன் உயிர் நீத்த சங்கரலிங்கனாரை திராவிட மாடல் திமுக அரசு போற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழர்களுக்கு எந்த அடையாளமும்  வரலாற்று பெருமையும் சுவடும் இருக்கக்கூடாது என்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம். இன்னும் 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தால் தமிழ்நாடு பெயர் மாற்றப்பட்டு  ‘கருணாநிதி நாடு’என்று இருக்கும். கழிப்பிடம் மற்றும் குடுப்பகத்திற்கு மட்டுமே கருணாநிதி பெயர் இல்லை என சாடினார்.தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடியின் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்தார். உலக நாடுகள் எங்கு சென்றாலும், உலகின் மூத்த மொழி தமிழ் என்று பிரதமர் பேசுகிறார் என்றார்.

தொடர்ந்து பேசிய சீமான் தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடி பேசினார். ஆனால், விஜய்யின் பெயரை ஒருமுறைக்கூட சொல்லவில்லை. நான் குட்டிக்கதை சொல்ல வந்தவன் அல்ல, வரலாற்றை கற்பிக்க வந்தவன். இது சினிமா டைலாக் அல்ல தம்பி, செஞ்சு டைலாக். நீங்கள் இனி தான் அம்பேத்கரையும், பெரியாரையும், சங்க இலக்கியங்களையும் படிக்க வேண்டும். நாங்கள் அனைத்தையும் படித்துவிட்டோம். பாண்டியன் மன்னன் கதை கதையல்ல,அது எங்கள் வரலாறு என விஜய் சொன்ன குட்டிக்கதைக்கு சீமான் பதிலடி கொடுத்தார்.

மேலும், திராவிடம் என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியவில்லை. தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியவில்லை. ஆற்றில் ஒரு காலும், சேற்றில் ஒரு காலும் என்ன இது? என கேள்வி எழுப்பினார். மேலும் திராவிடமும், தமிழ் தேசியமும் ஒரே கொள்கை என நினைத்துவிட்டார். 75 ஆண்டுகால பவள விழா கொண்டாடும் திமுகவிற்கே திராவிடம் என்றால் என்ன என்று தெரியவில்லை. திராவிடம் என்பது வேறு தமிழ் தேசியம் என்பது வேறு. தமிழர்களுக்கு தமிழ் தேசியமே பொருந்தும். இலங்கையில் தமிழர்கள் இறந்து கிடந்தபோது தான் திராவிடம் வேறு என்பது புரிந்தது. தமிழ் தேசியம் திராவிடத்திற்கு நேர் எதிர் இரண்டும் எப்படி ஒன்றாகும். தமிழ் தேசியம் தமிழ்நாடு பிறந்தநாளை கொண்டாடும். தமிழ்நாடு என பெயர் வைத்ததை திராவிடம் கொண்டாடும். இதில் தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றா என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பினார். மேலும், நீங்கள் கூறுவது கொள்கை அல்ல, கூமுட்டை, அதுவும் அழுகிய கூமுட்டை எனவும் கடுமையாக சாடி பேசினார்.

சாலையில் அந்த ஓரத்தில் நிற்க வேண்டும் அல்லது இந்த ஓரத்தில் நிற்க வேண்டும், நடுரோட்டில் நின்றால் லாரியில் அடிபட்டு தான் இறந்துவிடுவார் என விஜய்யின் கொள்கையை தாக்கி பேசினார். மேலுன் எங்களின் லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும், எதிரி எதிரிதான்..இதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என பேசினார். 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow