ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கும் முதலமைச்சர் !

ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்தித்து ROCA, Edibon, CIE ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

Jan 30, 2024 - 12:36
Jan 30, 2024 - 12:38
ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுக்கும் முதலமைச்சர் !

ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்தித்து ROCA, Edibon, CIE ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழ்நாடு அமைச்சரவைக்கூட்டம்  கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்தில் 2024-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது, ஆளுநரை அழைப்பதா? வேண்டாமா? என்பது குறித்து  ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

2024-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் முதல் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் 2வது வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசும் வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு குறித்து விவாதிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதனை முன்னிட்டு, தொழில் அமைப்புகள், பல்வேறு சங்கங்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வந்ததாக பார்க்கப்படுகிறது.மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு சென்ற நிலையில் முதலமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் சென்றுள்ளார். ஸ்பெயினில் முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின். மேலும் அதன் தொடர்ச்சியாக பல்வேறு முதலீட்டாளர்களை முதலமைச்சர் இன்று சந்தித்து பேசுகிறார்.

மேலும் குறிப்பாக, ROCA, Edibon, CIE ஆகிய நிறுவனங்களை சார்ந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்வதாகவும், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருமாறு முதலமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow