"ஆளே இல்ல பெல்லு, வேட்பாளரே சொல்லல அதுக்குள்ள போஸ்டர்.." யார் அந்த பிரபலம்?

ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமா காங்கிரஸ் தலைமை?

Mar 23, 2024 - 08:14
Mar 23, 2024 - 08:20
"ஆளே இல்ல பெல்லு, வேட்பாளரே சொல்லல அதுக்குள்ள போஸ்டர்.." யார் அந்த பிரபலம்?

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில், கரூர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நிறைவு செய்து தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்பே கரூரின் பல்வேறு பகுதிகளிலும் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர் என சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தான் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.